Published:Updated:

சென்னை: திரைப்படம் பார்க்கச் சென்ற பெண், 4-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை! - போலீஸ் விசாரணை

சென்னை
News
சென்னை

சென்னையில் குழந்தைகளுடன் படம் பார்க்கச் சென்ற பெண், நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

சென்னை: திரைப்படம் பார்க்கச் சென்ற பெண், 4-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை! - போலீஸ் விசாரணை

சென்னையில் குழந்தைகளுடன் படம் பார்க்கச் சென்ற பெண், நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை
News
சென்னை

சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர்கள் பாலாஜி, ஐஸ்வர்யா தம்பதி. பாலாஜி அமெரிக்காவில் சமையல் வேலை செய்துவருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நிலையில், தனிமையிலிருக்கும் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாகக் கடுமையான மனஅழுத்தத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு, சென்னை விமான நிலையத்திலுள்ள திரையரங்கில் புதிதாக வெளியான `பொன்னியின் செல்வன் - 2' படம் பார்க்கச் சென்றிருக்கிறார்.

சென்னை
சென்னை

படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே கழிவறைக்குச் செல்வதாகக் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு, வெளியே வந்திருக்கிறார் ஐஸ்வர்யா. வெளியே வந்தவர், விமான நிலையத்திலுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வளாகத்தின் நான்காவது மாடிக்குச் சென்றிருக்கிறார். தனது செல்போனை அங்கேயே வைத்துவிட்டு, அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், இது குறித்துத் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் ஐஸ்வர்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், ஐஸ்வர்யாவின் செல்போனை மீட்டு ஆய்வு நடத்தினர். அவர் கடைசியாகப் பேசிய எண்ணுக்கு அழைத்துப் பேசும்போது, அது ஐஸ்வர்யாவின் உறவினர் என்று தெரியவருகிறது. அவரிடம் விசாரிக்கையில், ஐஸ்வர்யா, தான் குழந்தைகளுடன் படம் பார்க்கச் செல்வதாகக் கூறியதைத் தெரிவித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

அதையடுத்து படம் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளைமீட்ட காவல்துறையினர், அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

போலீஸ்
போலீஸ்
ட்விட்டர்

முதற்கட்ட விசாரணையில், ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாகவே கடுமையான மனஅழுத்தத்தில் இருந்து வந்ததும், தனியார் மருத்துவமனையில் அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில்தான், படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த இடத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்கின்றனர் போலீஸார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.