Published:Updated:

திருச்சி: லிஃப்ட் கேட்ட பெண்ணை, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி – பகீர் சம்பவம்

மாதிரி படம்
News
மாதிரி படம்

பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

திருச்சி: லிஃப்ட் கேட்ட பெண்ணை, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி – பகீர் சம்பவம்

பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி படம்
News
மாதிரி படம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்மணி காயத்ரி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). 2-வது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக திருச்சி சிறுகனூர் ரெட்டிமாங்குடியிலுள்ள தங்கை வீட்டுக்கு வந்து தங்கியிருந்திருக்கிறார். இந்த நிலையில், ரெட்டிமாங்குடியிலிருந்து ஊருக்குக் கிளம்புவதற்காக நேற்று முன்தினம் மாலை ஊரிலுள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்திருக்கிறார். அங்கு நீண்ட நேரமாகியும் பேருந்து கிடைக்காததால், அங்கிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள சிறுகனூருக்குச் சென்று பஸ்  பிடித்துவிடலாம் என நினைத்து நடந்து சென்றிருக்கிறார்.

அப்போது அந்த வழியாக துறையூர் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்பவர் பைக்கில் வர, காயத்ரி லிஃப்ட் கேட்டிருக்கிறார். பைக்கை நிறுத்திய சுரேஷ், பெண்மணியின் தங்கையை குறிப்பிட்டு, `ஏம்மா… நீ அவங்களோட அக்காதானே... எங்க போறீங்க... வாங்க, நானும் சிறுகனூர் வழியாத்தான் போறேன். உங்களை இறக்கிவிட்டுடுறேன்’ எனச் சொல்லி பைக்கில் ஏற்றியிருக்கிறார். சிறிது தூரம் சென்றதுமே, ‘குறுக்குவழியில போனா சீக்கிரமாப் போயிடலாம்’ என முள்ளுக்காடு ஒன்றின் ஒத்தையடிப் பாதை வழியாக பைக்கை செலுத்தியவர், திடீரென வண்டியை நிறுத்தி அத்துமீறியிருக்கிறார். அப்போது காயத்ரி முரண்டுபிடிக்க, ‘வர்றியா… இல்லை அடிச்சுக் கொல்லவா?’ என மிரட்டி ஒரு மிருகம்போல அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு காயத்ரியை பைக்கில் ஏற்றிக்கொண்டு சிறுகனூர் பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட சுரேஷ்
கைதுசெய்யப்பட்ட சுரேஷ்

பின்னர், தனக்கு நடந்த கொடுமை குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் கண்ணீரோடு காயத்ரி புகார் கொடுக்க, சுரேஷின் அடையாளங்களைவைத்து உடனே காவல்துறை களத்தில் இறங்கியது. காயத்ரி சொன்ன பைக்கின் அடையாளம், சட்டையின் நிறம் ஆகியவற்றைவைத்து சிறுகனூர் டாஸ்மாக்கில் மது அருந்திக்கொண்டிருந்த சுரேஷை போலீஸ் கைதுசெய்தது. அதையடுத்து லால்குடி கோர்ட்டில் அவரை ஆஜர்ப்படுத்திய போலீஸார், நீதிமன்ற உத்தரவின்படி சுரேஷை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நடந்த சம்பவம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “சுரேஷின் மனைவி அரசு மருத்துவமனையில் வேலை செய்யறாங்க. அதனால சுரேஷ் எந்த வேலைக்கும் போகாம, ஊர் சுத்திக்கிட்டு இருந்துருக்கான். சம்பவத்தப்பகூட போதையில்தான் சுரேஷ் இருந்துருக்கான். தான் என்ன செஞ்சோம்னே அவனுக்குத் தெரியலை. பாதிக்கப்பட்ட பெண்மணியை அரசுக் காப்பகத்துல சேர்த்திருக்கோம். அவங்களுக்கு சில டெஸ்ட் எடுக்கவேண்டியிருக்கு” என்றனர்.