Published:Updated:

குடும்பப் பிரச்னை; இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை; திருவண்ணாமலையில் சோகம்!

மரணம்
News
மரணம் ( சித்திரிப்புப் படம் )

குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

குடும்பப் பிரச்னை; இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை; திருவண்ணாமலையில் சோகம்!

குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மரணம்
News
மரணம் ( சித்திரிப்புப் படம் )

திருவண்ணாமலை மாவட்டம், வட்ராபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்ராஜ் - சூர்யா தம்பதி. இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில், நான்கு வயதிலும், ஒரு வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள். சின்ராஜ் கனலாபாடி ஊராட்சி மன்றச் செயலாளராகவும், சூர்யா ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகவும் பணியாற்றிவந்திருக்கின்றனர். இந்த நிலையில், சின்ராஜுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இந்த நிலையில், நண்பனின் திருமணத்துக்காகச் சென்றிருந்த சின்ராஜ், நேற்று நள்ளிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி, பிள்ளைகளைக் காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த சின்ராஜ், அக்கம் பக்கத்தில் விசாரித்துவிட்டு பல்வேறு பகுதிகளில் தேடியதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சூர்யாவின் செல்போன் ஒரு கிணற்றின் அருகே கிடப்பதையறிந்து சந்தேகம் கொண்ட சின்ராஜ், கீழ்பென்னாத்தூர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்திருக்கிறார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார், கிணற்றில் குதித்து சூர்யா, அவர் பிள்ளைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தற்கொலை - மரணம்
தற்கொலை - மரணம்

நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு சூர்யாவையும், ஒரு குழந்தையையும் சடலமாக மீட்டனர். இருவரின் உடல்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், மற்றொரு சிறுவனின் உடலைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்திருக்கும் கீழ்பென்னாத்தூர் போலீஸார், சின்ராஜிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு, தாயும் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.