Published:Updated:

ராணிப்பேட்டை: ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் குப்புறக் கவிழ்ந்த கார் - பறிபோன 2 சிறுமிகளின் உயிர்!

விபத்து

ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால், துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, (வயது 15). முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரின் மகள் சுமையா பாத்திமா (வயது 17). இந்த இரண்டு குடும்பத்தினரும் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வஜ்ரகரூர் பகுதியில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்றனர். இரண்டு கார்களில் மொத்தம் 13 பேர் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, இன்று காலை சென்னைக்குத் திரும்பினர். முகமது சலீம், அப்துல் ரசாக் குடும்பத்தினர் வந்த காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான விஜய் ஓட்டினார்.

விபத்தில் சிக்கிய கார்
விபத்தில் சிக்கிய கார்

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெல் தொழிற்சாலை அருகே பைபாஸ் சாலையில் வந்தபோது, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காருக்குள் இருந்த சிறுமிகள் தமசுல் பாத்திமா, சுமையா இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட நான்குபேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

ராணிப்பேட்டை: ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் குப்புறக் கவிழ்ந்த கார் - பறிபோன 2 சிறுமிகளின் உயிர்!

சிகிச்சைக்காக அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த சிப்காட் போலீஸார், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.