Published:Updated:

விழுந்து நொறுங்கிய விமானம்; 17 நாள்கள் காட்டில் தவித்த குழந்தைகள் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

அமேசான் விமான விபத்து

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், அவர்கள் பயணம் செய்த விமானம் காட்டில் விழுந்து நொறுங்கிய 2 வாரங்களுக்குப் பிறகு, உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:

விழுந்து நொறுங்கிய விமானம்; 17 நாள்கள் காட்டில் தவித்த குழந்தைகள் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், அவர்கள் பயணம் செய்த விமானம் காட்டில் விழுந்து நொறுங்கிய 2 வாரங்களுக்குப் பிறகு, உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அமேசான் விமான விபத்து

கொலம்பியாவைச் சேர்ந்த செஸ்னா 206 என்ற விமானம், அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அராராகுவாரா மற்றும் குவாவியர் மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் ஆகிய நகரங்களுக்கு இடையே கடந்த மே 1-ம் தேதி அதிகாலை பயணித்தது. விமானத்தில், ஒரு தம்பதி தங்கள் 11 மாத குழந்தை உள்பட நான்கு குழந்தைகளுடன் பயணித்தனர்.

விமானம், அமேசான் வனப்பகுதிக்கு மேலே வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அமேசான் விமான விபத்து
அமேசான் விமான விபத்து

இந்நிலையில், காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 15-ம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டது.

இதனையடுத்து, சேதமடைந்த விமானத்தின் உள்ளே, விமானி மற்றும் குழந்தைகளின் தாய், தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் பற்றி விவரம் தெரியாத நிலையில், ராணுவ வீரர்கள் தொடர் தேடுதலில் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தேடுதல் பணியின் 17-ம் நாளில், அடர்ந்த வனப்பகுதியில் அங்கு கிடைத்த பொருள்களை வைத்தே சிறிய கூடாரம் அமைத்து அந்தக் குழந்தைகள் தங்கியிருந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் பத்திரமாக கொலம்பியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமேசான் விமான விபத்து
அமேசான் விமான விபத்து

40 மீட்டர் உயரம் வரை வளரும் ராட்சத மரங்கள், காட்டு விலங்குகள், கனமழை ஆகியவற்றுக்கு இடையே தேடுதல் சற்று கடினமாக இருந்தது. உதவிக்கு 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இது குறித்தும் கொலம்பியாவின் அதிபர் தன் ட்விட்டர் பக்கத்தில் விட முயற்சியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு நன்றி என்றும், 17 நாள்களுக்கு பிறகு குழந்தைகள் உயிருடன் கிடைத்தது நாட்டுக்கே மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.