Published:Updated:

நெல்லை: பாய்மரப் படகு கவிழ்ந்து கடலுக்குள் தத்தளித்த வீரர்கள்- பாரம்பர்யப் போட்டியில் நடந்த விபரீதம்

பாய்மரப் படகுப்போட்டி

கடலில் வீசிய அலையில் சிக்கிய பாய்மரப் படகு நிலை குலைந்து தள்ளாடியதுடன், கடலுக்குள் கவிழ்ந்தது. அதிலிருந்த 10 வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த நிலையில், வேறு படகுகளில் இருந்தவர்களால் மீட்கப்பட்டனர்.

Published:Updated:

நெல்லை: பாய்மரப் படகு கவிழ்ந்து கடலுக்குள் தத்தளித்த வீரர்கள்- பாரம்பர்யப் போட்டியில் நடந்த விபரீதம்

கடலில் வீசிய அலையில் சிக்கிய பாய்மரப் படகு நிலை குலைந்து தள்ளாடியதுடன், கடலுக்குள் கவிழ்ந்தது. அதிலிருந்த 10 வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த நிலையில், வேறு படகுகளில் இருந்தவர்களால் மீட்கப்பட்டனர்.

பாய்மரப் படகுப்போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டம், உவரி தி.மு.க சார்பாக பாரம்பர்ய பாய்மரப் படகுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டம், பெருமணல் முதல் உவரி வரை நடைபெற்ற படகுப்போட்டியில் உவரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏழு படகுகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு படகிலும் தலா 10 வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்ற படகுகள்
போட்டியில் பங்கேற்ற படகுகள்

இந்தப் போட்டியில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கடலோரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர், பாய்மரப் படகுகள் கடலுக்குள் பாய்ந்து செல்வதைப் பார்த்து உற்சாகத்துடன் தங்கள் ஆதரவாளர்களை ஊக்கப்படுத்தினர். இந்த நிலையில், கடலில் அலைகள் வேகமாக எழும்பியதால், கடலின் சீற்றத்தைச் சமாளிக்க முடியாமல், ராஜன் என்பவரது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான படகில் இருந்த 10 வீரர்களும் கடலுக்குள் தத்தளித்தனர். அவர்களை அங்கிருந்த மீனவர்களும், சக பாய்மரப் படகுப்போட்டியின் வீரர்களும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்தப் போட்டிகள் நடப்பது குறித்து காவல்துறையினரிடமும், கடலோரக் காவல் படையினரிடமும் முன்கூட்டியே தகவல் தெரிவித்தபோதிலும், கடலோரக் காவல்படையின் படகுகள் ரோந்துப் பணியில் ஈடுபடவில்லை எனப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரையில் இருந்த பார்வையாளர்கள்
கரையில் இருந்த பார்வையாளர்கள்

போட்டியில் பங்கேற்ற மீனவர்கள் எதிர்பாராதவிதத்தில் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களை உள்ளூர் மீனவர்கள் உரிய நேரத்தில் மீட்டிருக்காவிட்டால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதால் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கடலோரக் காவல் படையினர் வராததைக் குறையாகத் தெரிவித்தனர். பெருமணல் முதல் உவரி வரை 25 மைல் தூரம் நடந்த பாரம்பர்யப் பாய்மரப் படகுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.