Published:Updated:

திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம் - 15 வாகனங்கள் சேதம்

உயிரிழப்பு

பிரேக் பிடிக்காத லாரியை சாலையோரமாக நிறுத்த முயன்றபோது அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 5-க்கும் மேற்பட்ட கார்கள் மீது லாரி மோதியது. இதில், கோயில் பூசாரி கண்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் மாநகரின் முக்கியச் சாலையான குமரன் சாலையில் விறகுகளை ஏற்றிக்கொண்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டிவந்தார். திருப்பூர் குமரன் சாலை வழியாக வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது முன்னால் சென்ற வாகனங்கள்மீது மோதியது. ஓட்டுநர் முருகன் லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை.

விபத்து
விபத்து

லாரியை சாலையோரமாக நிறுத்த முயன்றபோது அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 5-க்கும் மேற்பட்ட கார்கள் மீது லாரி மோதியது. இதில் காங்கேயம் சாலையைச் சேர்ந்த கோயில் பூசாரி கண்ணன் என்பவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

விபத்து
விபத்து

இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாரி அங்குள்ள டிரான்ஸ்ஃபார்மரில் மோதி நின்றது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.

லாரி ஓட்டுநரிடம் போலீஸார் விசாரித்ததில், பிரேக் பிடிக்காததால் லாரியை நிறுத்த முடியாமல் போனதாக தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.