Published:Updated:

டாட்டூவை அகற்ற வந்த விமானப் பணிப்பெண்... 120 கி.மீ வேகத்தில் வந்த கார் - விபத்தில் பலியான சோகம்!

பல்லவி

மும்பையில் நள்ளிரவில் 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பி.எம்.டபிள்யூ கார், குப்பை லாரியில் மோதிக்கொண்டதில் விமானப் பணிப்பெண் உயிரிழந்தார்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது விபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, அதிகமானோர் அந்தச் செயலைச் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் கம்பெனி ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரி காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். அந்த காரை ஓட்டிய நபர் மது அருந்தியிருந்தார். இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் மும்பையில் நடந்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பல்லவி என்ற விமான பணிப்பெண் மும்பைக்கு வந்திருந்தார். அவர் ஏற்கெனவே பணி செய்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், வேலையை விட்டுவிட்டு வேறு ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.

டாட்டூவை அகற்ற வந்த விமானப் பணிப்பெண்... 120 கி.மீ வேகத்தில் வந்த கார் - விபத்தில் பலியான சோகம்!

அந்த நிறுவனம் பல்லவியிடம் அவரின் கையில் வரையப்பட்டிருந்த டாட்டூவை அகற்றிவிட்டு, வேலைக்கு வரும்படி கூறிவிட்டது. இதையடுத்து டாட்டூவை அகற்றுவதற்காக மும்பைக்கு வந்திருந்தார். மும்பையில் அவரின் நண்பர் விஜய் பண்டேகர் வீட்டில் தங்கியிருந்தார். விஜய், பல்லவி, இரண்டு பெண் தோழிகள் சாக்கிநாக்காவில் பார் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்துகொள்வதற்காகச் சென்றனர். அதிகாலை வரை பார்ட்டி நடந்தது. பார்ட்டி முடிந்த பிறகு அவர்கள் பி.எம்.டபிள்யூ காரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது கார் ஜுகு காவல்நிலையப் பகுதிக்குட்பட்ட சாலையில் வந்துகொண்டிருந்தபோது, வேகத்தடையைக் கவனிக்காமல் விபத்துக்குள்ளானது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த குப்பை லாரியில் மோதிக்கொண்டது. விபத்தில் பல்லவி உட்பட நான்கு பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் பல்லவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

டாட்டூவை அகற்ற வந்த விமானப் பணிப்பெண்... 120 கி.மீ வேகத்தில் வந்த கார் - விபத்தில் பலியான சோகம்!

காரை ஓட்டிய விஜய் குடிபோதையில் இருந்திருக்கிறார். அதோடு கார் 120 கிலோமீட்டர் வேகத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பறந்து செல்வதுபோல் சென்றிருக்கிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, கார் சாலையின் மேற்புறம் பறந்து செல்வதுபோல் இருந்தது. கார் ஓட்டிய விஜய் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். விஜய் கடற்படையில் பணியாற்றிவருகிறார்.