Published:Updated:

கிருஷ்ணகிரி: தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்; பயணிகள் ரயில் சேவைகள் பாதிப்பு!

தடம் புரண்ட சரக்கு ரயில்

ரயில் தண்டவாளம் சரிசெய்யும் பணி நடப்பதால், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்திவந்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

Published:Updated:

கிருஷ்ணகிரி: தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்; பயணிகள் ரயில் சேவைகள் பாதிப்பு!

ரயில் தண்டவாளம் சரிசெய்யும் பணி நடப்பதால், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்திவந்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

தடம் புரண்ட சரக்கு ரயில்

கிருஷ்ணகிரி அருகே, உரம் ஏற்றிச் சென்ற ரயிலின், 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு, சரக்கு ரயில் பெங்களூரு நோக்கி நேற்று (20-ம் தேதி) மாலை புறப்பட்டது. இந்த ரயிலை லோகோ பைலட் சர்மா ஓட்டிவந்தபோது, காப்பாளர் குஞ்சன்குமார் உடனிந்தார். ரயில் திருச்சி, சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு செல்வதாக இருந்தது. ரயிலில் இருந்த, 41 பெட்டிகளில் 21 பெட்டிகளில் உரமும், மீதமுள்ள, 21 பெட்டிகள் காலியாகவும் இருந்தன.

இந்த நிலையில், இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உடையாண்டஅள்ளி பக்கமாக வந்தபோது, திடீரென்று, 6 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் 3-வது பெட்டி முதல் 8-வது பெட்டி வரையில் தண்டவாளத்தைவிட்டு விலகி, தரையில் இறங்கின.

தடம் புரண்ட சரக்கு ரயில்
தடம் புரண்ட சரக்கு ரயில்

அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். சேலம், தருமபுரி, பெங்களூரிலிருந்து, 50-க்கும் மேற்பட்ட ரயில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, ரயில் இன்ஜினிலிருந்து, 2 பெட்டிகள் கழற்றப்பட்டு, ராயக்கோட்டை மார்க்கமாக அனுப்பிவைக்கப்பட்டன.

தண்டவாளத்திலிருந்து இறங்கிய, 6 பெட்டிகள் தவிர, மற்ற பெட்டிகள் கழற்றப்பட்டு மாரண்டஅள்ளி வழியாக சேலம் மார்க்கத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. தடம் புரண்ட, 6 பெட்டிகளிலிருந்து உர மூட்டைகள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. ரயில் தண்டவாளப் பணி நடப்பதால், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்!

இது தொடர்பாக தென்னக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘கோவை - லோக்மானியா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014), சேலம் ரயில் நிலையத்திலிருந்து, பெங்களூருவுக்கு குப்பம், பங்காருப்பேட்டை, மாலூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.

மேலும், பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677) பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு திருப்பத்தூர் வழியாகவும், பெங்களூரு - காரைக்கால் ரயில் (16529) திருப்பத்தூர் வழியாகவும் செல்கிறது. தொடர்ந்து, நாகர்கோவில் - பெங்களூரு ரயில் (17235) சேலத்திலிருந்து திருப்பத்தூர், ஜோலார் பேட்டை கிருஷ்ணராஜபுரம் வழியாகச் செல்கிறது. மாற்றுப்பாதையில் இயக்கப்படும் இந்த ரயில்கள் தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களுக்குச் செல்லாது’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ரயில் தண்டவாளம் சரிசெய்யும் பணி நடப்பதால், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திவந்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.