Published:Updated:

கரூர்: நூடுல்ஸில் எண்ணெய்க்கு பதிலாக களைக்கொல்லி மருந்து - 15 பேருக்கு வாந்தி, மயக்கம்!

குளித்தலை ( நா.ராஜமுருகன் )

கூட்டாஞ்சோறாக்கி சாப்பிடுவதற்காக நூடுல்ஸில் எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக களைக்கொல்லி மருந்தை ஊற்றி சமைத்து சாப்பிட்டதால், 15 பேர் பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

கரூர்: நூடுல்ஸில் எண்ணெய்க்கு பதிலாக களைக்கொல்லி மருந்து - 15 பேருக்கு வாந்தி, மயக்கம்!

கூட்டாஞ்சோறாக்கி சாப்பிடுவதற்காக நூடுல்ஸில் எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக களைக்கொல்லி மருந்தை ஊற்றி சமைத்து சாப்பிட்டதால், 15 பேர் பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குளித்தலை ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது நல்லாகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் அடிக்கடி கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றும் ஆறு வயது சிறுமி சுபஸ்ரீ தொடங்கி, 38 வயதான நவமணி வரை 15-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமி, பெண்கள் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட நினைத்திருக்கின்றனர். அரிசியை வைத்து சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, இந்தமுறை வித்தியாசமாக நூடுல்ஸ் செய்து சாப்பிட நினைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தோகைமலையிலுள்ள ஒரு கடையிலிருந்து 15 நூடுல்ஸ் பாக்கெட்களை வாங்கி வந்திருக்கின்றனர். அந்த கிராமத்திலுள்ள பெருமாள் என்பவரின் வீட்டின் அருகில் அதை சமைக்க முடிவெடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், நூடுல்ஸ் செய்வதற்குத் தேவையான எண்ணெய் வாங்கி வராததால், அருகிலுள்ள கதிர்வேல் என்பவரின் வீட்டின் ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருந்த களைக்கொல்லி மருந்தை, நல்லெண்ணெய் என நினைத்து, அதைக்கொண்டு நூடுல்ஸ் செய்து, 15 பேரும் சாப்பிட்டிருக்கின்றனர். நேற்று மதியம் 12 மணியளவில் இப்படிக் கூட்டாஞ்சோறு அடிப்படையில் நூடுல்ஸை செய்து அனைவரும் சாப்பிட்டிருக்கின்றனர்.

குளித்தலை
குளித்தலை
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், அனைவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட, அதன் பிறகு மாலை 4 மணிபோல் 15 பேருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், பதறிப்போன அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடும்போது, எண்ணெய்க்கு பதிலாக தவறுதலாக களைக்கொல்லி மருந்தை ஊற்றி சமைத்து சாப்பிட்டதால், 15 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.