Published:Updated:

திடீரெனத் தாக்கிய வளர்ப்பு யானை; பரிதாபமாக உயிரிழந்த பாகன் - நீலகிரியில் சோகம்!

பாகனுடன் மசினி யானை

நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு யானை தாக்கியதில், பாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Published:Updated:

திடீரெனத் தாக்கிய வளர்ப்பு யானை; பரிதாபமாக உயிரிழந்த பாகன் - நீலகிரியில் சோகம்!

நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு யானை தாக்கியதில், பாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாகனுடன் மசினி யானை

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கிறது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம். பழைமைவாய்ந்த இந்த முகாமில் கும்கி யானைகள், தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானைகளை மீட்டு, வனத்துறை கட்டுப்பாட்டில் பராமரித்துவருகின்றனர். உள்ளூர் பழங்குடிகளே இந்த யானைகளின் பாகன்களான இருக்கின்றனர். காலை, மாலை வேளைகளில் யானைகளை முகாமுக்கு அழைத்து வந்து உணவு வழங்குவது வழக்கம்.

யானைகள் முகாம்
யானைகள் முகாம்

இந்த நிலையில், தெப்பக்காடு அருகிலுள்ள அபயரண்யம் முகாமில் இன்று காலை யானைகளுக்கு உணவு வழங்கிவிட்டு, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கையில் மசினி என்ற பெண் யானை அதன் பாகன் பாலனை முகாமில் வைத்து திடீரென தாக்கியிருக்கிறது. கடுமையான காயத்துடன் நிலைகுலைந்து கீழே விழுந்த பாலனை, சக பாகன்கள் மீட்டிருக்கின்றனர். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

2018-ல் திருச்சி சமயபுரம் கோயிலில் இதே யானை தாக்கியதில் பாகன் கஜேந்திரன் என்பவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள், "2006-ல் முதுமலை மசினியம்மன் கோயில் அருகில் தாயைப் பிரிந்த நிலையில் எட்டு மாத பெண் யானை குட்டியாக மீட்டு `மசினி' எனப் பெயர் சூட்டி முகாமில் பராமரித்து வரப்பட்டது. 2015-ல் இந்த யானை தாக்கியதில் பாகன் ஒருவர் உயிரிழந்தார், சிலர் காயமடைந்தனர்.

உயிரிழந்த பாகன் பாலன்
உயிரிழந்த பாகன் பாலன்

யானையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மீண்டும் தெப்பக்காடு முகாமுக்கு அழைத்து வந்து பராமரித்து வந்தோம். பாலன் என்ற பழங்குடி இதன் பாகனாக இருந்துவந்தார். இந்த நிலையில், இன்று காலை திடீரென பாலனைத் தாக்கியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாகன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, அரசு வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது" என்றனர்.