Published:Updated:

சப்வேயில் விபத்து; போன் சிக்னல் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாமல் இளைஞர் பலி!

டெல்லி பிரகதி மைதான் சப்வே

டெல்லி சப்வேயில் சரியாக செல்போன் சிக்னல் கிடைக்காததால், அங்கு வாகன விபத்துக்குள்ளாகியிருந்த இளைஞர், குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாமல் உயிரிழந்தார்.

Published:Updated:

சப்வேயில் விபத்து; போன் சிக்னல் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாமல் இளைஞர் பலி!

டெல்லி சப்வேயில் சரியாக செல்போன் சிக்னல் கிடைக்காததால், அங்கு வாகன விபத்துக்குள்ளாகியிருந்த இளைஞர், குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாமல் உயிரிழந்தார்.

டெல்லி பிரகதி மைதான் சப்வே

தேசியத் தலைநகர் டெல்லியில் சப்வே (Subway) ஒன்றில் செல்போன் சிக்னல் சரியாகக் கிடைக்காத காரணத்தால், அங்கு வாகன விபத்துக்குள்ளாகியிருந்த 19 வயது இளைஞர் மருத்துவமனைக்குச் சரியான நேரத்துக்கு கொண்டுசெல்ல முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி உயிரிழந்த நபர் ராஜன் ராய் என்று தெரியவந்திருக்கிறது.

சாலை விபத்து
சாலை விபத்து

முன்னதாக ராஜன் ராய் கடந்த திங்களன்று, உத்தரப்பிரதேசத்தின் மீரட்டிலிருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, டெல்லியில் சுமார் 1.3 கி.மீ நீளமுள்ள பிரகதி மைதான் சப்வேயில் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் ராஜன் ராயின் ஹெல்மெட் முற்றிலும் சேதமடைந்ததால், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆனால், அந்த சப்வேயில் செல்போன் சிக்னல் சரிவரக் கிடைக்காததால், அந்த வழியே சென்றவர்கள் அவசர உதவிக்கு போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க முடியவில்லை. பின்னர் எப்படியோ ஒருவழியாக லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்கு இளைஞர் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்க முடியாததால் சிகிச்சை பலனின்றி ராஜன் ராய் உயிரிழந்தார் என போலீஸ் தெரிவித்திருக்கிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

இந்த நிலையில் சப்வேயில் முறையாக செல்போன் சிக்னல் கிடைக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் ராஜன் ராயை மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் உயிரிழந்ததால், அவரின் பெற்றோர் இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.