Published:Updated:

கல்லட்டி மலைப்பாதை: குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்து, பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கல்லட்டி - விபத்துக்குள்ளான கார்

மலேசிய நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 'ரோலர் க்ராஸ் பேரியர்' என்ற உருளை வடிவ ரப்பர் தடுப்பில் மோதி கார் நின்றிருக்கிறது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

கல்லட்டி மலைப்பாதை: குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்து, பரிதாபமாக உயிரிழந்த பெண்!

மலேசிய நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 'ரோலர் க்ராஸ் பேரியர்' என்ற உருளை வடிவ ரப்பர் தடுப்பில் மோதி கார் நின்றிருக்கிறது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கல்லட்டி - விபத்துக்குள்ளான கார்

கல்லட்டி மலைப்பாதை விபத்து அபாயம் நிறைந்த மலைப்பாதைகளின் பட்டியலில் இருக்கிறது. 36 கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட செங்குத்து மலைப்பாதை என்பதால், உயிர் பறிக்கும் சாலையாக இருக்கிறது. ஊட்டியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. விபத்து அபாயத்தை குறைக்க நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு புதிய வழிமுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான சாலையாக மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

கல்லட்டி மலைப்பாதை
கல்லட்டி மலைப்பாதை

இந்த நிலையில், நேற்று மதியம் கல்லட்டி மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பைசன் வேலி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. சாலையோரத் தடுப்பில் மோதி நின்ற காரைக் கண்ட வாகன ஓட்டுநர்கள் சிலர், காருக்குள் காயங்களுடன் தவித்துக்கொண்டிருந்த பயணிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த விபத்து குறித்துப் பேசிய காவல்துறையினர், "நீலகிரி, தூதூர் மட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயா, சந்தோஷ், அருண்பிரசாத், திவ்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பொக்காபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கார் மூலம் கல்லட்டி வழியாகச் சென்றிருக்கின்றனர். 34-வது கொண்டை ஊசி வளைவை கார் கடக்கையில் டயர் வெடித்ததாகத் தெரிகிறது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

கட்டுப்பாட்டை இழந்த கார், மலேசிய நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 'ரோலர் க்ராஸ் பேரியர்' என்ற உருளை வடிவ ரப்பர் தடுப்பில் மோதி நின்றிருக்கிறது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. படுகாயமடைந்த விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றனர்.