Published:Updated:

சேலம்: எடப்பாடி அருகே பட்டாசு ஆலை தீ விபத்து - பெண் பலி; ஒருவர் படுகாயம்

விபத்து ஏற்பட்ட பகுதி

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேடப்பனை போலீஸார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

Published:Updated:

சேலம்: எடப்பாடி அருகே பட்டாசு ஆலை தீ விபத்து - பெண் பலி; ஒருவர் படுகாயம்

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேடப்பனை போலீஸார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

விபத்து ஏற்பட்ட பகுதி

சேலம், எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியில் தன்னுடைய நண்பர் சுப்ரமணி என்பவருடன் சேர்ந்து பட்டாசு தயாரிக்கும் உரிமை பெற்று, கடை நடத்திவருகிறார். இதில் சன்னியாசி கடை பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி அமுதா, அதே பகுதியைச் சேர்ந்த வேடப்பன் உட்பட நான்கு பேர் பணியாற்றிவந்தனர்.

நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இரண்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராத நிலையில் அமுதா, வேடப்பன் ஆகியோர் பட்டாசுகளை பார்சல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், மாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள், வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் அமுதா, வேடப்பன் ஆகியோர் உடல் கருகி படுகாயமடைந்தனர். வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், ஓடிவந்து பார்த்தபோது அமுதா பரிதாபமாக உயிரிழந்து கிடந்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இது குறித்த தகவல் கொங்கணாபுரம் போலீஸாருக்குக் கிடைக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் உடல் கருகி உயிருக்குப் போராடிவந்த வேடப்பனை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இது குறித்த தகவல்கள் வெளிவரவே தமிழ்நாடு முதலமைச்சர், நிவாரண நிதியாக இறந்துபோன அமுதா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியும், படுகாயமடைந்த வேடப்பன் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிதியும் அறிவித்தார்.

சேலத்தில் பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.