Published:Updated:

கேதார்நாத்: ஹெலிகாப்டர் கிளம்புவதற்கு முன்பு செல்ஃபி... திடீரென பிளேடில் சிக்கி பலியான அதிகாரி!

கேதார்நாத்

கேதார்நாத் கோயிலுக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல முடியாது. சுமார் 20 கி.மீ தொலைவுக்குப் பக்தர்கள் மலையேறிச் செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக சுமார் 8,664 கழுதைகள் சேவையும், 9 தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களையும் இயக்கவிருக்கின்றன.

Published:Updated:

கேதார்நாத்: ஹெலிகாப்டர் கிளம்புவதற்கு முன்பு செல்ஃபி... திடீரென பிளேடில் சிக்கி பலியான அதிகாரி!

கேதார்நாத் கோயிலுக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல முடியாது. சுமார் 20 கி.மீ தொலைவுக்குப் பக்தர்கள் மலையேறிச் செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக சுமார் 8,664 கழுதைகள் சேவையும், 9 தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களையும் இயக்கவிருக்கின்றன.

கேதார்நாத்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இந்த புனிதத் தலங்கள் பனிக்காலத்தில் மூடப்பட்டிருக்கும். இவற்றில் யாத்திரை மேற்கொள்வதற்கு ஏற்கெனவே 16 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். இன்னும் ஏராளமானோர் தொடர்ந்து பதிவுசெய்த வண்ணமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரகாசி மாவட்டத்திலுள்ள கங்கோத்ரி, யமுனோத்ரியின் நுழைவாயில்கள்  யாத்ரீகர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கின்றன .

கேதார்நாத்
கேதார்நாத்

கேதார்நாத் ஏப்ரல் 25-ம் தேதியும், பத்ரிநாத் ஏப்ரல் 27-ம் தேதியும் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில் கேதார்நாத் கோயிலுக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல முடியாது. சுமார் 20 கி.மீ தொலைவுக்குப் பக்தர்கள் மலையேறிச் செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக சுமார் 8,664 கழுதைகள் சேவையும், 9 தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களையும் இயக்கவிருக்கின்றன.

இந்த நிலையில், உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் நிதிக் கட்டுப்பாட்டாளரான ஜிதேந்திர குமார் சைனி என்பவர் கேதார்நாத்தில் ஏப்ரல் 25-ம் தேதி ஹெலிகாப்டர் சேவை தொடங்கவிருப்பதை முன்னிட்டு, அங்கு ஆய்வு பணிகளுக்காகச் சென்றிருந்தார். அப்போது ஜிதேந்திர குமார் Garhwal Mandal Vikas Nigam ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு, செல்ஃபி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஜிதேந்திர குமார் ஹெலிகாப்டரின் டெயில் ரோட்டர் பிளேடில் சிக்கி, கழுத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.