Published:Updated:

வாணியம்பாடி: பேனர் கடை ஊழியரை அறைந்த அதிமுக பிரமுகர்... வெளியான வீடியோ; போலீஸ் விசாரணை

தாக்கப்படும் காட்சி
News
தாக்கப்படும் காட்சி

வாணியம்பாடி அருகே பேனர் கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கும் அ.தி.மு.க பிரமுகரின் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Published:Updated:

வாணியம்பாடி: பேனர் கடை ஊழியரை அறைந்த அதிமுக பிரமுகர்... வெளியான வீடியோ; போலீஸ் விசாரணை

வாணியம்பாடி அருகே பேனர் கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கும் அ.தி.மு.க பிரமுகரின் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

தாக்கப்படும் காட்சி
News
தாக்கப்படும் காட்சி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் வேலாயுதம் என்பவர் டிஜிட்டல் பேனர் கடை நடத்திவருகிறார். அந்தக் கடையில், வாணியம்பாடி அருகிலிருக்கும் ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வேலை செய்கிறார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி, பேனர் பிரின்ட் அடிப்பதற்காக ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த சிலர், கடைக்கு வந்தனர். இவர்கள் கேட்ட அளவுக்கான பேனரின் விலை 900 ரூபாய் என கடை ஊழியர் செல்வராஜ் கூறியிருக்கிறார்.

தாக்கப்படும் காட்சி
தாக்கப்படும் காட்சி

இதை எதிர்த்த அவர்கள், 700 ரூபாய்க்கு பேனர் பிரிண்ட் அடித்துத் தருமாறு கேட்டிருக்கிறார்கள். ‘முடியாது’ என கடை ஊழியர் மறுக்கவே, அந்தக் கும்பல் ஆத்திரத்துடன் சென்றிருக்கிறது. இதையடுத்து, கும்பலுக்கு ஆதரவாகக் கடைக்கு வந்த அ.தி.மு.க பிரமுகர்கள் ஆர்.கே.சாமி, சிவகுமார் ஆகிய இருவரும் கடை ஊழியர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வாக்குவாதம் முற்றவே, செல்வராஜை அ.தி.மு.க பிரமுகர் ஆர்.கே.சாமி கன்னத்தில் அறைந்து, நெஞ்சுப் பகுதியில் தாக்கியிருக்கிறார்.

இந்தச் சம்பவம், கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தாக்குதலுக்கு ஆளான ஊழியர் செல்வராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், ஆலங்காயம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

தாக்கப்படும் காட்சி
தாக்கப்படும் காட்சி

இதற்கிடையே, பேனர் கடை ஊழியர் தாக்கப்படும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களிலும் வைரலாகிவருகிறது. புகாருக்குள்ளான அ.தி.மு.க பிரமுகர் ஆர்.கே.சாமி என்பவர், ஆலங்காயம் அருகிலிருக்கும் பெத்தூர் பகுதியின் வார்டு செயலாளராக இருக்கிறார். அவருடன் வந்திருந்த சிவகுமார், ஆலங்காயம் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.