Published:Updated:

பஞ்சாப்: பதிண்டாவில் மேலும் ஒரு ராணுவ வீரர் மரணம் - ராணுவ அதிகாரிகள் சொல்வதென்ன?

பதிண்டா ராணுவ முகாம்
News
பதிண்டா ராணுவ முகாம்

``பிரேத பரிசோதனைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' - ராணுவ அதிகாரிகள்

Published:Updated:

பஞ்சாப்: பதிண்டாவில் மேலும் ஒரு ராணுவ வீரர் மரணம் - ராணுவ அதிகாரிகள் சொல்வதென்ன?

``பிரேத பரிசோதனைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' - ராணுவ அதிகாரிகள்

பதிண்டா ராணுவ முகாம்
News
பதிண்டா ராணுவ முகாம்

பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கின்றனர். அவர்கள் நான்கு பேரில் இருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் என்றும், இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்துவரும் நிலையில், அதே ராணுவ முகாமில் மற்றொரு வீரர் துப்பாக்கிச்சூடு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த 11-ம் தேதி விடுப்பு முடிந்து மீண்டும் ராணுவ முகாமுக்குத் திரும்பிய 20 வயது வீரர், நேற்று ஆயுதம் ஏந்தி, காவல் பணியில் இருந்தார். அப்போது மாலை 4:30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, சென்று பார்த்தபோது, ராணுவ வீரர் சுடப்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பதிண்டா ராணுவ முகாம்
பதிண்டா ராணுவ முகாம்

இதைத் தற்கொலை முயற்சியாகக் கருதுகிறோம். பிரேத  பரிசோதனைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்ட நான்கு ராணுவ வீரர்கள் சம்பவத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" எனத் தெரிவிக்கின்றனர்.