Published:Updated:

SRK: `தயவுசெய்து ஆர்யனை சிறையிலடைத்து விடாதீர்கள் என ஷாருக் கான் கெஞ்சினார்'- கோர்ட்டில் சமீர் தகவல்

SRK - ஷாருக் கான்
News
SRK - ஷாருக் கான்

``என்னுடைய மகனிடம் இரக்கம் காட்டுங்கள். என் மகன் உடைந்துபோவான். ஒரு தந்தை என்ற முறையில் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மகனைச் சிறையில் அடைத்துவிடாதீர்கள்" என்று கேட்டிருக்கிறார் ஷாருக் கான்.

Published:Updated:

SRK: `தயவுசெய்து ஆர்யனை சிறையிலடைத்து விடாதீர்கள் என ஷாருக் கான் கெஞ்சினார்'- கோர்ட்டில் சமீர் தகவல்

``என்னுடைய மகனிடம் இரக்கம் காட்டுங்கள். என் மகன் உடைந்துபோவான். ஒரு தந்தை என்ற முறையில் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மகனைச் சிறையில் அடைத்துவிடாதீர்கள்" என்று கேட்டிருக்கிறார் ஷாருக் கான்.

SRK - ஷாருக் கான்
News
SRK - ஷாருக் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், 2021-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டார். ஆர்யன் கான் சிறையிலிருந்த ஒரு மாதத்தில், ஷாருக் கான் எந்த வேலைக்கும் போகாமல், தன்னுடைய மகனை எப்படி வெளியில் கொண்டு வருவது என்ற சிந்தனையில் இருந்தார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று, தன்னுடைய மகனைப் பார்த்து ஆறுதல் கூறிவந்தார். தற்போது ஆர்யன் கானைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே, லஞ்ச ஊழல் பிரச்னையில் சிக்கியிருக்கிறார். ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி கேட்டதாக சமீர் வான்கடே மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டபோது, ஷாருக் கான் சமீர் வான்கடேவுடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்திருக்கிறார். அதில், ``என்னுடைய மகனிடம் இரக்கம் காட்டுங்கள். என் மகன் உடைந்துபோவான். ஒரு தந்தை என்ற முறையில் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மகனைச் சிறையில் அடைத்துவிடாதீர்கள்" என்று கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் சமீர் வான்கடேவிடம், `சில நிமிடங்கள் பேசலாமா?' என்று வாட்ஸ்அப்பில் ஷாருக் கான் அனுமதி கேட்கிறார்.

அதற்கு சமீர் வான்கடே சம்மதம் தெரிவித்த பிறகு, நீண்ட வாட்ஸ்அப் சாட்டிங்கில் ஈடுபட்டார். இந்தச் சாட்டிங் 2021-ம் ஆண்டு, அக்டோபர் 14-ம் தேதி நடந்தது. அதாவது ஆர்யன் கான் கைதாகி 10 நாள்கள் கழித்த பிறகு நடந்திருக்கிறது.

சமீர் வான்கடே தன்மீது சி.பி.ஐ தொடர்ந்திருக்கும் வழக்கின்கீழ், தன்மீது நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பழிவாங்கும் நோக்கத்தில் சி.பி.ஐ இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக அதில் தெரிவித்திருக்கிறார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

இந்த மனுவோடு ஷாருக் கானுடன் சமீர் வான்கடே வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த விவரங்களையும் சேர்த்திருக்கிறார். இருவருக்குமிடையே நடந்த வாட்ஸ்அப் சாட்டிங் விவரங்கள் வைரலாகிவருகின்றன. இன்று இந்த மனுவின்மீது விசாரணை நடைபெற்றது. அதில், திங்கள்கிழமை வரை சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.