Published:Updated:

``அவர்தான் அத்துமீறினார்..!" - ஜாமீனில் வெளிவந்த நடிகை பிரித்வி ஷா மீது புகார்

பிரித்வி ஷா, சப்னா கில்
News
பிரித்வி ஷா, சப்னா கில்

என் நண்பர்கள் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் எங்களைத் தாக்கினர் என நடிகை போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:

``அவர்தான் அத்துமீறினார்..!" - ஜாமீனில் வெளிவந்த நடிகை பிரித்வி ஷா மீது புகார்

என் நண்பர்கள் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் எங்களைத் தாக்கினர் என நடிகை போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

பிரித்வி ஷா, சப்னா கில்
News
பிரித்வி ஷா, சப்னா கில்

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கடந்த வாரம் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியிலுள்ள கிளப் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் கிளப்பைவிட்டு வெளியில் வந்தபோது அங்கு காத்திருந்த சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் சப்னா கில் உட்பட சிலர் கிரிக்கெட் வீரருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ஃபி எடுக்க அவர்கள் முண்டியடித்ததால் அவர்களை செக்யூரிட்டி கார்டு அங்கிருந்து வெளியில் விரட்டினார்.

இதனால் கோபமடைந்த அவர்கள் பிரித்வி ஷா சென்ற காரைப் பின்தொடர்ந்து சென்றனர். சிக்னலுக்காக கிரிக்கெட் வீரரின் கார் குறிப்பிட்ட இடத்தில் நின்றபோது, அங்கு வந்த சப்னாகில்லும் அவருடன் வந்தவர்களும் காரை கம்பால் தாக்கினர். இதில் காரின் முன், பின் பகுதியில் கண்ணாடி உடைந்தது. அதோடு பொய் வழக்கு பதிவுசெய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக பிரித்வி ஷா மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் கொடுத்த புகாரின் பேரில் சப்னா கில் கைதுசெய்யப்பட்டார். அதோடு அவருடன் வந்த ஏழு பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

போலீஸ்
போலீஸ்

சப்னாகில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து வந்தவுடன் பிரித்வி ஷா, அவரின் நண்பர்கள்மீது சப்னா கில் போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

அதில் பிரித்வி ஷாவும் அவருடன் வந்தவர்களும் சேர்ந்து தன்னைக் கம்பால் அடித்து, பொது இடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அளித்த சப்னா கில் அளித்த பேட்டியில், ``நானோ அல்லது என்னுடன் வந்தவர்களோ யாரையும் தாக்கவில்லை. யாரிடமும் பணமும் கேட்கவில்லை. செல்ஃபி எடுக்கவும் முயலவில்லை. நாங்கள் எங்களுக்குள் மகிழ்ச்சியாக இருந்தோம். என் நண்பர்கள் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் எங்களைத் தாக்கினர். என் நண்பர்கள் தாக்கப்படுவதைப் பார்த்து அவர்களைக் காப்பாற்றச் சென்றேன். ஆனால், சிலர் என்னிடம் சிலர் பாலியல்ரீதியாகத் தொட்டுத்தாக்கினர்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.