Published:Updated:

ஷார்ஜாவில் போதைப்பொருளுடன் கைதான பாலிவுட் நடிகை; `நாய்' பிரச்னையில் போலியாகச் சிக்கவைத்த நபர்கள்!

பாலிவுட் நடிகை
News
பாலிவுட் நடிகை

சாதாரண நாய் பிரச்னையில் பாலிவுட் நடிகையிடம் போதைப்பொருளைக் கொடுத்தனுப்பி, ஷார்ஜாவில் சிக்கவைத்த இரண்டு பேர் மும்பையில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

ஷார்ஜாவில் போதைப்பொருளுடன் கைதான பாலிவுட் நடிகை; `நாய்' பிரச்னையில் போலியாகச் சிக்கவைத்த நபர்கள்!

சாதாரண நாய் பிரச்னையில் பாலிவுட் நடிகையிடம் போதைப்பொருளைக் கொடுத்தனுப்பி, ஷார்ஜாவில் சிக்கவைத்த இரண்டு பேர் மும்பையில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

பாலிவுட் நடிகை
News
பாலிவுட் நடிகை

மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா, இந்த மாதத் தொடக்கத்தில் ஷார்ஜாவுக்குச் சென்றபோது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்டார். அவர் ஷார்ஜாவில் நடக்கவிருந்த படப்பிடிப்பு ஒத்திகைக்காகச் சென்றபோது போதைப்பொருள் வைத்திருந்ததாகப் பிடிபட்டார். அவரை ஷார்ஜாவுக்கு அனுப்பிவைத்த ராஜேஷ் என்பவர் படப்பிடிப்பு ஒத்திகைக்குத் தேவைப்படும் என்று கூறி, ஒரு டிராபியை நடிகையிடம் கொடுத்தனுப்பினார். ஷார்ஜாவுக்குச் சென்றதும் நடிகை கிறிசன் பெரேரா அவரை அனுப்பிய ராஜேஷ் என்பவரைத் தொடர்புகொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லை.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

அதோடு அவர் பெயரில் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்ட தகவலும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரிக்கச் சென்றபோதுதான், நடிகையிடமிருந்த டிராபியை சோதனை செய்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். தற்போது, கிறிசன் பெரேரா ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து நடிகையின் பெற்றோர் மும்பை போலீஸில் புகார் செய்தனர்.

போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தியதில், பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நாய்ச் சண்டையில் பழிவாங்கும் நோக்கத்தில் நடிகையிடம் போதைப்பொருளை ஆண்டனி பால் என்பவர் தன்னுடைய நண்பர் ராஜேஷ் மூலம் ஷார்ஜாவுக்குக் கொடுத்தனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து ஏற்கெனவே ஆண்டனியைக் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துவிட்ட நிலையில், இன்று ராஜேஷும் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆண்டனியும், நடிகை கிறிசன் பெரேராவும் ஒரே கட்டடத்தில் வசித்துவந்தது தெரியவந்தது.

கைது
கைது

இதில் ஆண்டனியின் சகோதரியும், நடிகையின் தாயாரும் நாய்ப் பிரச்னையில் சண்டையிட்டுக்கொண்டது தெரியவந்தது. அதோடு ஆண்டனியிடமும் நடிகையின் தாயார் இதே நாய்ப் பிரச்னையில் சண்டையிட்டிருக்கிறார்.

அந்தக் கோபத்தில்தான் நடிகையைச் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படப்பிடிப்பு ஒத்திகை என நடிகைக்கு ஆசைவார்த்தை கூறி, ஷார்ஜாவுக்கு போதைப்பொருளுடன் அனுப்பி சிக்கவைத்திருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.