Published:Updated:

இரவில் வந்த மெசேஜ்: ரூ.40 லட்சம் அபேஸ்; மும்பை தொழிலதிபர் பெயரில் புது சிம் கார்டு வாங்கி மோசடி!

சைபர் கொள்ளை
News
சைபர் கொள்ளை

மும்பை தொழிலதிபர் பெயரில் வேறு சிம் கார்டு வாங்கி, வங்கியிலிருந்து ரூ.40 லட்சத்தை எடுத்த மர்ம ஆசாமிகளை மும்பை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:

இரவில் வந்த மெசேஜ்: ரூ.40 லட்சம் அபேஸ்; மும்பை தொழிலதிபர் பெயரில் புது சிம் கார்டு வாங்கி மோசடி!

மும்பை தொழிலதிபர் பெயரில் வேறு சிம் கார்டு வாங்கி, வங்கியிலிருந்து ரூ.40 லட்சத்தை எடுத்த மர்ம ஆசாமிகளை மும்பை போலீஸார் தேடிவருகின்றனர்.

சைபர் கொள்ளை
News
சைபர் கொள்ளை

இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. எஸ்.எம்.எஸ்., இமெயில் அனுப்பி மோசடி செய்வதும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, இரவில் புதிய சிம் கார்டு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக மெசேஜ் வந்தது. ஆனால், அவர் சிம் கார்டு கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதனால், தான் புதிய சிம் கார்டு கேட்கவில்லை என்று கூறி தொழிலதிபர் தனக்கு வந்த மெசேஜுக்கு பதிலளித்தார். ஆனால் காலையில் அவரின் சிம் கார்டில் சிக்னல் துண்டிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர் தன் போனுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கால் ஃபார்வேர்டு முறையில் மாற்றிவைத்திருந்தார்.

இரவில் வந்த மெசேஜ்: ரூ.40 லட்சம் அபேஸ்; மும்பை தொழிலதிபர் பெயரில் புது சிம் கார்டு வாங்கி மோசடி!

எனவே, தன் மற்றொரு போனில் சோதனை செய்து பார்த்தபோது பண பரிமாற்றத்துக்காக இரண்டு ஒன் டைம் பாஸ்வேர்டு வந்திருந்தது. உடனே வங்கியைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தொழிலதிபர் சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வங்கியில் விசாரித்தபோது தொழிலதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து எட்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.40 லட்சம் ரூபாய் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. அன்று காலையில் பணம் மாற்றப்பட்ட வங்கில் கணக்கிலிருந்து ஏ.டி.எம் மூலம் மேற்கு வங்கத்தில் பணம் எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பணம் மாற்றப்பட்ட ஏழு வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் முடக்கப்பட்டன. போலீஸாரின் விசாரணையில் மோசடிப்பேர்வழிகள் தொழிலதிபரின் சிம் கார்டை மாற்ற இமெயில் மூலம் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியிருந்தது தெரியவந்தது. சிம் கார்டை மாற்ற மோசடிப்பேர்வழிகள் கொடுத்த ஆவணங்கள் தொடர்பான விவரங்களை மொபைல் போன் கம்பெனியிடம் போலீஸார் கேட்டிருக்கின்றனர். இது குறித்து சைபர் பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவருகின்றனர். தொழிலதிபர் பெயரில் வேறு சிம்கார்டு வாங்கி, வங்கியிலிருந்து ரூ.40 லட்சத்தை எடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

கடந்த ஜனவரி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் சிம் கார்டை முடக்கி, புதிய சிம் கார்டு வாங்கி ரூ.28 லட்சத்தை மர்மக் கும்பல் எடுத்தது. சைபர் பிரிவு போலீஸார் போராடி அதில் ரூ.16 லட்சத்தை மட்டும் காப்பாற்றினர்.

இதே போன்று கடந்த 2022-ம் ஆண்டு, மும்பை அந்தேரியைச் சேர்ந்த தொழிலதிபரின் சிம் கார்டை முடக்கி, புதிய சிம் கார்டு வாங்கி ரூ.22 லட்சத்தை மர்ம நபர்கள் அபகரித்தனர். அதே ஆண்டு, ஜனவரி மாதம் மும்பையைச் சேர்ந்த 75 வயது தொழிலதிபரின் சிம் கார்டை முடக்கி, புதிய சிம் கார்டு வாங்கி ரூ.1.7 கோடியை மர்ம நபர்கள் அபகரித்துவிட்டனர்.