Published:Updated:

`படித்தது எட்டாவது, பார்ப்பது டாக்டர் வேலை' - தருமபுரியில் போலி டாக்டர், அவர் மகன்மீது வழக்கு பதிவு

போலி டாக்டர் வீட்டில் ஆய்வு
News
போலி டாக்டர் வீட்டில் ஆய்வு

‘எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த முருகேசன், முன்பு கம்பவுண்டராகப் பணியாற்றிய அனுபவத்தில், தனது பெயரிலேயே கிளினிக் நடத்தி, போதிய தகுதியின்றி மக்களுக்கு சிகிச்சையளித்து வந்திருக்கிறார்.’ – எஸ்.ஐ ரமேஷ்

Published:Updated:

`படித்தது எட்டாவது, பார்ப்பது டாக்டர் வேலை' - தருமபுரியில் போலி டாக்டர், அவர் மகன்மீது வழக்கு பதிவு

‘எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த முருகேசன், முன்பு கம்பவுண்டராகப் பணியாற்றிய அனுபவத்தில், தனது பெயரிலேயே கிளினிக் நடத்தி, போதிய தகுதியின்றி மக்களுக்கு சிகிச்சையளித்து வந்திருக்கிறார்.’ – எஸ்.ஐ ரமேஷ்

போலி டாக்டர் வீட்டில் ஆய்வு
News
போலி டாக்டர் வீட்டில் ஆய்வு

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்த நல்லம்பள்ளி அருகே, உரிய மருத்துவப் படிப்பு முடிக்காமல், அப்பாவும் மகனும் கிளினிக் நடத்தி மக்களுக்குச் சிகிச்சையளித்து வருவதாக, மாவட்ட சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுகாதாரத்துறையினர், பறக்கும் படையினர், அதியமான் கோட்டை போலீஸார் நேற்று மாலை, சம்பவ இடத்துக்குச் சென்று, இரண்டு கிளினிக்குகளிலும் ஆய்வுசெய்தனர். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (62) என்பவர் மருத்துவம் படிக்காமல், தனது பெயரிலேயே வீட்டில் கிளினிக் நடத்தி, மக்களுக்குக் காய்ச்சல், சர்க்கரைநோய் எனப் பல நோய்களுக்குச் சிகிச்சையளித்துவந்தது கண்டறியப்பட்டது.

போலி டாக்டர் வீட்டில் ஆய்வு
போலி டாக்டர் வீட்டில் ஆய்வு

இதேபோல், முருகேசனின் மகனான கிருஷ்ணமூர்த்தியின் கிளினிக்கிலும் ஆய்வுசெய்த சுகாதாரத்துறையினர், அவரும் முறையான படிப்பின்றி மருத்துவம் பார்த்ததைக் கண்டறிந்தனர். நேற்று மாலை, முருகேசனைக் கைதுசெய்த போலீஸார், அவர் மகன்மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

‘படித்தது எட்டாவது...’

இது குறித்து அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ ரமேஷ் நம்மிடம், ‘‘எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த முருகேசன், முன்பு சில மருத்துவமனைகளில் கம்பவுண்டராகப் பணியாற்றிய அனுபவத்தில், தனது பெயரிலேயே கிளினிக் நடத்தி, போதிய தகுதியின்றி மக்களுக்குச் சிகிச்சையளித்து வந்திருக்கிறார். அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி ஹோமியோபதி படிப்பு முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஊசி செலுத்துவதற்கோ, சிகிச்சையளிப்பதற்கோ தகுதியில்லை. மருத்துவப் படிப்பு முடிக்காமல் மக்களுக்குச் சிகிச்சையளித்த குற்றத்துக்காக, இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது’’ என்றார்.