Published:Updated:

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி?

மதன்
News
மதன்

தலைமறைவாக இருக்கும் யூடியூபர் மதனின் மறுபக்கங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன. கைதான அவனின் மனைவி கிருத்திகா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி?

தலைமறைவாக இருக்கும் யூடியூபர் மதனின் மறுபக்கங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன. கைதான அவனின் மனைவி கிருத்திகா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மதன்
News
மதன்

சமூக வலைதளங்களில் யூடியூபர் மதனின் ஆபாசப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதிலிருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. சென்னை புளியந்தோப்பு காவல் சரக சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வினோத் குமார், யூடியூபர் மதனுக்கு சம்மன் அனுப்பினார். ஆனால் சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த வேங்கைவாசலில் குடும்பத்துடன் தங்கியிருந்த மதன், தலைமறைவாகிவிட்டதால் சம்மனை போலீஸாரால் கொடுக்க முடியவில்லை.

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

இந்தச் சமயத்தில்தான் யூடியூபர் மதனின் முழு பயோட்டாவை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஒருவர் ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். அதில் மதனின் முழுப் பெயர் மதன்குமார். அவரின் அப்பா பெயர் மாணிக்கம். சொந்த ஊர் சேலம். மதன்குமாரின் மனைவி பெயர் கிருத்திகா. கைக்குழந்தை ஒன்று உள்ளது போன்ற விவரங்கள் இருந்தன. அதன் பிறகு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கிருத்திகாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது.

காதல் திருமணம்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தடை செய்யப்பட்ட `பப்ஜி’ கேம் பிரியர்களை குறிவைத்து யூடியூப் சேனல்களை மதன் தொடங்கியிருக்கிறார். அதற்கு அட்மினாக அவரின் மனைவி கிருத்திகா இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல்களை நடத்திவந்திருக்கின்றனர். கணவன், மனைவியான மதனும் கிருத்திகாவும் பப்ஜி கேம் பிரியர்கள். பப்ஜி கேமில் சூப்பர் சாட்டிங் மூலம் பேசியபடியே லைவ்வாக விளையாட முடியும். அதனால் மதன் லைவ்வாக கேமின் ட்ரிக்ஸ், டிப்ஸ்களைக் கூறுவார். அந்த விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் மதனின் பேச்சுகளை ஆர்வமாகக் கேட்டு ரசித்துவந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதன்
யூடியூபர் மதன்

விளையாடும்போது மதன், அவ்வப்போது பெண்களைக் குறித்து ஆபாசமாகப் பேசுவார். அதற்கு அவரின் மனைவி கிருத்திகாவும் பதிலளிப்பார். அதைக் கேட்கும் மற்றவர்கள் என்ன விளையாட்டின்போது இப்படிப் பேசுகிறார்கள் என்று கருதுவதுண்டு. ஆனால் அதை பலர் ரசித்தும் வந்திருக்கின்றனர். இதுதான் மதன் யூடியூப் சேனல் பிரபலமானதற்கு முக்கியக் காரணம். மதனின் ஆபாசப் பேச்சுகள், அநாகரிக வார்த்தைகளைக் கேட்க தனி ரசிகர்கள் இருந்தனர். யூடியூபில் லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் வந்ததும், யூடியூப் சேனல்கள் மூலம் வருமானம் வரத் தொடங்கின. அது கிருத்திகா, மதனின் வங்கிக் கணக்கில் வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்த மதனும் கிருத்திகாவும் நன்கொடை மூலமாகவும் மற்றவர்களை ஏமாற்றி பணத்தைச் சம்பாதித்தனர்.

பணம் மட்டுமே குறிக்கோள்:

கணவன், மனைவியான மதன், கிருத்திகாவின் முகங்கள் யூடியூப் சேனலில் தெரியாது. டிபி போட்டோவாக பள்ளிப் பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோக்களை மதன் பயன்படுத்திவந்தார். அதனால் கிருத்திகாவையும் ஒரு சப்ஸ்கிரைபர் என்றுதான் மற்றவர்கள் கருதிவந்தனர். லைவ் முடிந்ததும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ காலில் வருகிறேன் என மதன் கூறும்போது அதற்கு கிருத்திகாவும் ஓகே என்று சொல்லும் ஆடியோவைக் கேட்டு, மற்ற பப்ஜி கேம் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தாலும், தாங்களும் வீடியோ காலில் செல்வோம் என்ற ஆசையில் தூண்டப்படுவார்கள். அதுதான் மதன், கிருத்திகாவின் மாஸ்டர் பிளான். அது தெரியாமல் ஏராளமானவர்கள் மதனுடன் வீடியோ காலில் வந்து பேசி பணத்தை இழந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா
யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா

மதன், கிருத்திகா ஆகியோருக்கு யூடியூப் சேனல்கள், நன்கொடை மூலம் பணம் வரத் தொடங்கியதும் இருவரின் லைஃப் ஸ்டைலும் மாறத் தொடங்கியிருக்கிறது. சொகுசு கார்களையும், சொகுசு பங்களாக்களையும் வாங்கிய இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்திருக்கின்றனர். மீசையில்லாத மதனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவனோடு ஏராளமான சிறுவர், சிறுமிகள், இளம் வயதுடையவர்கள் ஆபாச சாட்டிங் செய்துவந்திருக்கின்றனர். அதையெல்லாம் ஆதாரமாகச் சேகரித்திருக்கிறோம். பல இடங்களுக்கு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கின்றனர். மதனின் வலையில் சில பெண்களும் வீழ்ந்திருக்கின்றனர். ஆனால் அது எதையும் கிருத்திகா கண்டுகொள்ளவில்லை. பணம் மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்திருக்கிறது.

கிருத்திகா சிக்கியது எப்படி?

யூடியூப் சேனல்களின் அட்மினாக இருந்த கிருத்திகா, மதனின் ஆபாசப் பேச்சுகள் கொண்ட வீடியோக்களை அப்லோடு செய்துவந்திருக்கிறார். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் கிருத்திகாவிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்திருக்கிறோம். அதனால் நீதிபதி முன் கிருத்திகாவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். மதன் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு கிருத்திகா எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார்.

மதன்
மதன்

போலீஸார் தேடுவதையறிந்த கிருத்திகாவும் மதனும் சென்னையிலிருந்து சேலத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு மனைவியையும் கைக்குழந்தையும் விட்டுவிட்டு மதன் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். கிருத்திகாவுடன் மதன் போனில் பேசிய தகவலைவைத்தே கிருத்திகாவைப் பிடித்தோம். பெங்களூரில் தலைமறைவாக மதன் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு டீம் அங்கு சென்றிருக்கிறது. தற்போது மதன், செல்போனைப் பயன்படுத்துவதில்லை.

மதனின் மறுபக்கங்கள்

அதனால் அவரின் நண்பர்கள் கிருத்திகாவின் தோழிகள், குடும்பத்தினர் ஆகியோரை ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம். இதற்கிடையே மதனுக்கு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் விரைவில் மதனைக் கைதுசெய்துவிடுவோம். மதனுக்கு யூடியூப் சேனல் மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய் கிடைத்துவந்திருக்கிறது. மதன் பயன்படுத்திய காரின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் என தெரியவந்திருக்கிறது. மதனின் கம்ப்யூட்டர் லேப்டாப், கிருத்திகாவின் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

``மதன் சிறு வயது முதலே ப்ளே பாய் போன்று வலம் வந்திருக்கிறாராம். ப்பஜி கேம் பிரியரான கிருத்திகா, இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். அவரையும் தன்னுடைய கவர்ச்சிகரமான பேச்சு மூலம் காதலித்திருக்கிறார். மதனும் கிருத்திகாவும் இணைந்து வாழ்ந்து வந்த பிறகுதான் திருமணம் செய்திருக்கின்றனர். மதனுக்குத் தோழிகள் நட்பு வட்டாரம் அதிகம். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்த மதன், ஸ்டைலாகப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதையே தன்னுடைய பிசினஸாக மாற்றியிருக்கிறார்" போன்ற தகவல்கள் கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.