Published:Updated:

சென்னை: பாலியல் வழக்கு; ஆறு மாதங்கள் தலைமறைவு - போலீஸ் எஸ்.ஐ கொல்கத்தாவில் சிக்கிய பின்னணி

 பாலியல் வழக்கு
News
பாலியல் வழக்கு

கோவையைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர் கொடுத்த புகாரில், சென்னை போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் என்பவர் பாலியல் வழக்கில் சிக்கியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கொல்கத்தாவில்வைத்துப் பிடித்திருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: பாலியல் வழக்கு; ஆறு மாதங்கள் தலைமறைவு - போலீஸ் எஸ்.ஐ கொல்கத்தாவில் சிக்கிய பின்னணி

கோவையைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர் கொடுத்த புகாரில், சென்னை போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் என்பவர் பாலியல் வழக்கில் சிக்கியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கொல்கத்தாவில்வைத்துப் பிடித்திருக்கிறார்கள்.

 பாலியல் வழக்கு
News
பாலியல் வழக்கு

கோவையைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `சென்னை பரங்கிமலையிலுள்ள மோட்டார் வாகன பராமரிப்புப் பிரிவில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றும் ஆண்ட்ரூஸ் என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. தற்போது ஆண்ட்ரூஸ், என்னை ஏமாற்றிவிட்டார். அதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆண்ட்ரூஸுக்கு சப்போர்ட்டாக அவரின் நண்பரான முன்னாள் ராணுவ வீரர் சுந்தர்ராஜ் இருக்கிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் பள்ளிக்கரணை போலீஸார் முன்னாள் ராணுவ வீரர் சுந்தர்ராஜைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகசேவகி, போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக போலீஸ் எஸ்.ஐ., இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். முன்ஜாமீன் கிடைக்காதததால் போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ், சில மாதங்களாகத் தலைமறைவாக இருந்துவந்தார். இந்தச் சூழலில், `பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் ஜோஸ்தங்கையா மேற்பார்வையில், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருக்கும் போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில் அவரின் செல்போன் சிக்னல் கொல்கத்தாவில் காட்டியது.

உடனடியாக தனிப்படை போலீஸார், கொல்கத்தாவுக்குச் சென்று போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்தனர். உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், சேலையூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸிடம் விசாரணை நடத்திவருகிறார். விசாரணையின்போது, ஆண்ட்ரூஸ், `தான் எந்தவிதத் தவறும் செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார். ஆனால் புகாரளித்த பெண்ணோ, தன்னிடம் இருக்கிற ஆதாரங்களை போலீஸாரிடம் சமர்ப்பித்திருக்கிறார். இதையடுத்து, போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸைக் கைதுசெய்து அவரை இன்று மாலை (13.1.2023) நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த பெண்ணுடன் போலீஸ் எஸ்.ஐ. ஆண்ட்ரூஸ் கடந்த ஓராண்டாக பழகிவந்திருக்கிறார். மரம் நடும் விழாவின்போது இவர்கள் இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள். நட்பாகப் பழகிவந்த இவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அந்தப் பெண், போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ், அவரின் நண்பரான முன்னாள் ராணுவ வீரர் சுந்தர்ராஜ் ஆகியோர்மீது புகாரளித்தார். அதன்பேரில் சுந்தர்ராஜைக் கைதுசெய்துவிட்டோம். போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தார். அவர் மீதான புகாரையடுத்து ஆண்ட்ரூஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.