Published:Updated:

சென்னை: மாமூல் கேட்டு மிரட்டல்; சுற்றிவளைத்த போலீஸ்; மாடியிலிருந்து குதித்த ரெளடி - நடந்தது என்ன?!

மாமூல் கேட்டு மிரட்டிய சென்னை ரவுடி
News
மாமூல் கேட்டு மிரட்டிய சென்னை ரவுடி

சென்னையில் மாமூல் கேட்டு பொதுமக்களை மிரட்டித் தாக்கிய கும்பலின் தலைவன் போலீஸுக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த சம்பவம் நடந்திருக்கிறது.

Published:Updated:

சென்னை: மாமூல் கேட்டு மிரட்டல்; சுற்றிவளைத்த போலீஸ்; மாடியிலிருந்து குதித்த ரெளடி - நடந்தது என்ன?!

சென்னையில் மாமூல் கேட்டு பொதுமக்களை மிரட்டித் தாக்கிய கும்பலின் தலைவன் போலீஸுக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த சம்பவம் நடந்திருக்கிறது.

மாமூல் கேட்டு மிரட்டிய சென்னை ரவுடி
News
மாமூல் கேட்டு மிரட்டிய சென்னை ரவுடி

சென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கையில் பட்டாக்கத்தியுடன் சில இளைஞர்கள் வலம் வந்தனர். மேலும், அந்தக் கும்பல் அங்கிருந்த கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியது. பணம் தர மறுத்தவர்களைப் பட்டாக்கத்தியால் வெட்டியிருக்கிறது இந்தக் கும்பல். மேலும், கடைகளின் கண்ணாடிகளை உடைத்ததுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்ட கார், சரக்கு வாகனங்களின் கண்ணாடிகளைக் கத்தியால் வெட்டி, உடைத்து அராஜகம் செய்துகொண்டிருந்தது.

தாக்குதல் நடத்தும் கும்பல்
தாக்குதல் நடத்தும் கும்பல்

இதே கும்பல், அண்ணாநகர், செங்குன்றம் போன்ற பகுதிகளிலும் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் போலீஸுக்குச் செல்ல, தனிப்படை அமைத்துத் தேடுதல் விசாரணையில் இறங்கியது. அதில், சமீபத்தில் வில்லிவாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ராஜேஷ் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த சிலர் தற்போது மாமூல் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இருவர் சிக்கினர். இந்தக் கும்பலுக்குத் தலைவனாக வலம் வந்தவன் கலை என்கிற கலைச்செல்வன். பிரபல ரெளடியான இவன் மட்டும் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தான். இந்த நிலையில், அவன் ஒரு வீட்டின் மாடியில் பதுங்கியிருக்கும் தகவலறிந்து அவனைச் சுற்றிவளைத்தது தனிப்படை போலீஸ். இதனால், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறான் கலை.

கை, கால் உடைந்த கலை
கை, கால் உடைந்த கலை

கீழே விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர், கலையை அங்கிருந்து மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டுப் போட்டுவிட்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பாக பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டித் தாக்கிய கலை, தற்போது தான் செய்தது தவறு என்று சொல்லி மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, கலை உள்ளிட்ட மாமூல் கேட்டு மிரட்டிய கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.