Published:Updated:

கோவை: காரில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பு - கைதானவர்கள் தப்ப முயன்றபோது கை எலும்பு முறிவு

கோவை செயின் பறிப்பு சம்பவம்
News
கோவை செயின் பறிப்பு சம்பவம்

கோவையில் காரில் வந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். போலீஸிடம் தப்பிக்க முயன்றபோது, கீழே விழுந்து அவர்களின் கை எலும்பு முறிந்திருப்பதாக போலீஸார் கூறியிருக்கின்றனர்.

Published:Updated:

கோவை: காரில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பு - கைதானவர்கள் தப்ப முயன்றபோது கை எலும்பு முறிவு

கோவையில் காரில் வந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். போலீஸிடம் தப்பிக்க முயன்றபோது, கீழே விழுந்து அவர்களின் கை எலும்பு முறிந்திருப்பதாக போலீஸார் கூறியிருக்கின்றனர்.

கோவை செயின் பறிப்பு சம்பவம்
News
கோவை செயின் பறிப்பு சம்பவம்

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவர் எப்போதும் ஜி.வி ரெசிடென்ஸி பகுதியில் நடைப்பயிற்சிக்குச் செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு மாலை அந்தப் பகுதியில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தார்.

கோவை செயின் பறிப்பு
கோவை செயின் பறிப்பு

அப்போது பின்னால் காரில் வந்த மர்மநபர்கள் கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பறிக்க முயன்றனர். உடனடியாக கௌசல்யா செயினைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

இதனால் காரில் அவர் சிறிது தூரம் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக கௌசல்யா உயிர் தப்பியிருந்தார்.

இதையடுத்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், குற்றச்செயலில் ஈடுபட்ட சக்திவேல், அபிஷேக் ஆகிய இருவரைக் கைதுசெய்தனர். செயின் பறிப்பில் ஈடுபடுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போலீஸ் அதிகாரி, “சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கெனவே சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

குற்றவாளிகளை ஒரே நாளில் கண்டுபிடிக்க, சிசிடிவி பெரிய அளவில் உதவியது. கோவை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், அப்போதுதான் இது மாதிரியான குற்றங்கள் குறையும்'’ என்றார்.

இதற்கிடையே போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது சக்திவேல், அபிஷேக் ஆகியோரின் கை எலும்பு முறிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

அபிஷேக்கின் இடது கை எலும்பும், சக்திவேலின் வலது கை எலும்பும் முறிந்திருக்கிறது.