Published:Updated:

இன்ஸ்டாவில் ஆன்லைன் வர்த்தகம்; பணத்தை இழந்த மனவிரக்தி - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!

தற்கொலை
News
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் போலிப் பங்குகளை வாங்கிப் பணத்தை இழந்த மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

இன்ஸ்டாவில் ஆன்லைன் வர்த்தகம்; பணத்தை இழந்த மனவிரக்தி - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!

இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் போலிப் பங்குகளை வாங்கிப் பணத்தை இழந்த மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை
News
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

வடசென்னை ஏழுகிணறு போர்ச்சுகல் சர்ச் தெருவில் வசித்துவருபவர் சாந்தி. திருமணமாகி கணவரைப் பிரிந்த நிலையில், சாந்தி வீட்டிலிருந்தபடியே சில பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்துவந்திருக்கிறார். சாந்திக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரின் மூத்த மகளான மகாலட்சுமி (19), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் பயின்றுவந்தார்.

சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டுவந்த மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் '75 பங்குகளை வாங்கினால் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்களில் இருமடங்காக லாபம் கிடைக்கும்' என்ற விளம்பத்தைப் பார்த்து, அதில் முதலீடு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறார். 

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

இவ்வாறாக நேற்று முன்தினம் (01.04.23) இரவு 11மணியளவில் ஆரம்பித்த அவர், விடியற்காலை வரை தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கிலிருந்த சுமார் 30,000 ரூபாய் செலவுசெய்து, 60,000 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியிருக்கிறார்.

பின்னர், தான் பங்குகள் வாங்கி லாபம் பார்த்த பணத்தை எடுக்க முயன்றிருக்கிறார். அப்போதுதான், இவ்வளவு நேரம் தான் வாங்கியது அனைத்தும் போலியான பங்குகள் என்பது  மகாலட்சுமிக்குத் தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மகாலட்சுமி, என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், பணம் பறிபோனதையறிந்த சாந்தி, மகளைத் திட்டியிருக்கிறார். இதனால் மனவேதனையில் இருந்த மகாலட்சுமி, நேற்றிரவு புடவையைக் கொண்டு தனது அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

காலை மகளை எழுப்பச் சென்ற தாய் சாந்தி அதிர்ச்சியடைந்து முத்தியால்பேட்டை போலீஸாருக்குத் தகவலளித்ததன் பேரில், பிரேதத்தைக் கைப்பற்றி போலீஸார் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து இன்ஸ்டாகிராமிலுள்ள அந்தப் போலி ட்ரேடிங் பக்கத்தை முடக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

உயிரிழந்த மகாலட்சுமியின் தாயார் சாந்தி, இதே போன்று ஹிஜாவு நிறுவனத்தில் பணத்தைக் கட்டி ஏமாந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலியான ட்ரேடிங் பக்கத்தை நம்பி, முதலீடு செய்து ஏமாந்த மாணவி உயிரையே மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.