Published:Updated:

``கடுமையான தண்டனைகள் ஆணவக்கொலைகளைக் குறைக்க உதவும்" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்
News
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்

`கடுமையான தண்டனைகள் இத்தகைய சிந்தனைக் கொண்டவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.' - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்

2015-ம் ஆண்டு சேலம் பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவியுடன் பழகி வந்ததால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யால் விசாரிக்கப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவத்துக்குக் கடந்த சனிக்கிழமை அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை (யுவராஜ் சகோதரர்), சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து யுவராஜ் உட்பட 10 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று வெளியானது.

யுவராஜ்
யுவராஜ்

யுவராஜ், அவர் கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு சாகும் வரை (3) ஆயுள் தண்டனையும், குமார் (எ) சிவக்குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன், 5 வருடக் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும், சந்திர சேகருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்!
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்!
என்.ஜி.மணிகண்டன்

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் முத்தரசன் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``இந்த தீர்ப்பு வரவேற்க வேண்டிய தீர்ப்பு. எதிர்காலத்தில் இனி ஆணவப்படுகொலைகளை தடுக்க இந்த தீர்ப்பு பயன்படும் என நம்புகிறேன்.

கடுமையான தண்டனைகள் இத்தகைய சிந்தனைக் கொண்டவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வரவேற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.