Published:Updated:

'கூகுள் பேயில் தெரியாதவர்கள் பணம் அனுப்பினால் என்ன செய்ய வேண்டும்?' - சொல்கிறார் சைலேந்திர பாபு

சைலேந்திரபாபு
News
சைலேந்திரபாபு

``முன்பின் தெரியாதவர் கூகுள் பேயில் பணம் அனுப்பினால் அவர் குற்றவாளிதான். அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் பிளாக் செய்துவிட்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளியுங்கள்.'' - சைலேந்திர பாபு

Published:Updated:

'கூகுள் பேயில் தெரியாதவர்கள் பணம் அனுப்பினால் என்ன செய்ய வேண்டும்?' - சொல்கிறார் சைலேந்திர பாபு

``முன்பின் தெரியாதவர் கூகுள் பேயில் பணம் அனுப்பினால் அவர் குற்றவாளிதான். அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் பிளாக் செய்துவிட்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளியுங்கள்.'' - சைலேந்திர பாபு

சைலேந்திரபாபு
News
சைலேந்திரபாபு

கோவை சரக தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. வடமாநிலத் தொழிலாளர்களிடையே இருக்கக்கூடிய அச்சத்தைப் போக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சைலேந்திர பாபு, “தொடர் நடவடிக்கைகளால் வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் பதற்றம் குறைந்திருக்கிறது.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

அதே நேரத்தில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து 11 வழக்குகள், வழக்கு பதிவுசெய்து மூன்று பேரை கைதுசெய்திருக்கிறோம். சிலரைக் கைதுசெய்ய போலீஸார் பெங்களூரு, போபால், டெல்லி, பாட்னா பகுதிகளுக்குச் சென்றிருக்கின்றனர். பீகார் போலீஸாரும் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு வீடியோவில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களைத் தாக்கியதாகச் சொல்லி ஒரு தவறான வீடியோவைப் பரப்பினர். அவர்களை நாங்கள் ரகசியமாகத் தொடர்புகொண்டு, ‘இதேபோல வீடியோ தயாரித்துக் கொடுக்க முடியுமா?’ எனக் கேட்டோம். அதற்கு, ‘செய்கிறேன்’ எனக் கூறியிருக்கின்றனர். ட்ராமாபோல வீடியோ எடுத்து பரப்பிவருகின்றனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள்
வடமாநிலத் தொழிலாளர்கள்

இதில் சிலருக்கு அரசியல் தொடர்புகளும் இருக்கின்றன. ஏன் இது போன்று தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர் என்பது புலன் விசாரணையில் தெரியவரும்.

கூகுள் பே-யில் சிறிதளவு பணத்தை உங்களுக்கு அனுப்புவார்கள். சிறிது நேரத்தில் அழைத்து, ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்பார்கள். அதில் வங்கியின் விவரம், ஓ.டி.பி உள்ளிட்ட எல்லாவற்றையும் கேட்டு உங்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்து மொத்த பணத்தையும் எடுத்துவிடுவார்கள்.

கூகுள் பே
கூகுள் பே

முன்பின் தெரியாதவர் கூகுள் பே-யில் பணம் அனுப்பினால் அவர் குற்றவாளிதான். அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் பிளாக் செய்துவிட்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளியுங்கள்” என்றார்.