Published:Updated:

ஐ.எஃப்.எஸ் மோசடி; ஜாமீனில் வந்த ஏஜென்ட்; வீட்டைச் சுற்றிவளைத்த மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்!

ஜெகந்நாதன் வீடு - அதிகாரிகள் சோதனை
News
ஜெகந்நாதன் வீடு - அதிகாரிகள் சோதனை

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன இயக்குநரின் உதவியாளர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவரது வீட்டில் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்திவருகிறார்கள்.

Published:Updated:

ஐ.எஃப்.எஸ் மோசடி; ஜாமீனில் வந்த ஏஜென்ட்; வீட்டைச் சுற்றிவளைத்த மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்!

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன இயக்குநரின் உதவியாளர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவரது வீட்டில் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்திவருகிறார்கள்.

ஜெகந்நாதன் வீடு - அதிகாரிகள் சோதனை
News
ஜெகந்நாதன் வீடு - அதிகாரிகள் சோதனை

ங்குச்சந்தை முதலீட்டில் அதிக வட்டி தருவதாகக் கூறி, ஏஜென்ட்டுகள் மூலமாகப் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடியை வசூலித்து மோசடி செய்த வேலூர் ஐ.எஃப்.எஸ் (இன்டர்நேஷனல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்) நிறுவனம்மீது தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டே வழக்கு பதிவுசெய்தனர். ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை நடத்திவந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதால், தேடப்படும் குற்றவாளிகளாகவும் அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்
வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

‘டீம் லீடர்கள்’ எனப்படும் ஏஜென்ட்டுகள் சிலர் மட்டுமே கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், லட்சுமி நாராயணனின் நேரடி உதவியாளரும், முக்கிய ஏஜென்ட்டுகளில் ஒருவருமான ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். அவரது வீட்டில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையிலும், ரூ.7 லட்சம் ரொக்கப் பணம், 3 காசோலை புத்தகங்கள், 45 பாண்டு பத்திரங்கள், 5 பென்டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க், லேப் டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்த நிலையில், ஜெகந்நாதன் ஜாமீனில் வெளியே வந்த தகவலையறிந்த பணம் செலுத்திய முதலீட்டாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நேற்றைய தினம் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, இரண்டு பேர் பணத்தைத் திரும்பக் கேட்டு தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு தொற்றிக்கொண்டது. தகவலறிந்ததும் நெமிலி போலீஸார் விரைந்துவந்து பொதுமக்களைச் சமாதானம் செய்தனர். தீக்குளிக்க முயன்றவர்களையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர். இதனால், அந்தப் பகுதி முழுவதுமே பரபரப்பாகக் காணப்படுகிறது.

ஜெகந்நாதன் வீடு - அதிகாரிகள் சோதனை
ஜெகந்நாதன் வீடு - அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில், சென்னையிலிருந்து ஆறு பேர்கொண்ட மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 8 மணிக்கு காரில் ஜெகந்நாதன் வீட்டுக்கு திடீரென வந்தனர். ஜாமீனில் வெளியே வந்த ஜெகந்நாதன் தலைமறைவாகியிருப்பதைத் தெரிந்துகொண்ட அதிகாரிகள், அவரது வீட்டுக் கதவை உள்பக்கமாகப் பூட்டி சோதனை நடத்திவருகிறார்கள். வீட்டுக்குள் ஜெகந்நாதனின் குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சோதனையைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அந்தப் பகுதியில் கண்காணிப்பு, பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றம் தொடர்பாக ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்மீதான விசாரணையை மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.