Published:Updated:

வங்கிப் பெயரில் வந்த போலி லிங்க்... 'க்ளிக்' செய்து பணத்தைப் பறிகொடுத்த டி.வி நடிகை உட்பட 40 பேர்

சித்திரிப்பு படம்
News
சித்திரிப்பு படம்

வங்கிப் பெயரில் வந்த போலி லிங்க்கை `க்ளிக்’ செய்ததால் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது வங்கியில் இருந்த பணத்தை இழந்திருக்கின்றனர்.

Published:Updated:

வங்கிப் பெயரில் வந்த போலி லிங்க்... 'க்ளிக்' செய்து பணத்தைப் பறிகொடுத்த டி.வி நடிகை உட்பட 40 பேர்

வங்கிப் பெயரில் வந்த போலி லிங்க்கை `க்ளிக்’ செய்ததால் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது வங்கியில் இருந்த பணத்தை இழந்திருக்கின்றனர்.

சித்திரிப்பு படம்
News
சித்திரிப்பு படம்

ஆன்லைனில் மோசடி செய்பவர்கள் புதிது புதிதாகச் சிந்திக்கின்றனர். வங்கிக் கணக்கை நீண்ட நாள்களாக ஆப்ரேட் செய்யாமல் இருந்தால் கேஒய்சி விபரங்களை நிரப்பிக்கொடுக்கச் சொல்வார்கள். இந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மும்பையில் ஒரு கும்பல் தனியார் வங்கி ஒன்றின் வாடிக்கையாளர்களை மோசடி செய்திருக்கிறது. கேஒய்சி மற்றும் பான் கார்டு விபரங்கள் அப்டேட் செய்யப்படாததால் உங்களது வங்கிக் கணக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக மும்பையைச் சேர்ந்த தனியார் வங்கி ஒன்றின் வாடிக்கையாளர்களுக்கு கடந்த மூன்று நாள்களாக மெசேஜ் வர ஆரம்பித்தது.

ஸ்வேதா மேனன்
ஸ்வேதா மேனன்

அதோடு, `அந்த விபரங்களை அப்டேட் செய்ய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்’ என்று ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருக்கும். அதைச் சம்பந்தப்பட்ட வங்கியே அனுப்புவதுபோல் அனுப்பிவைத்திருந்தனர். அதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அவசரப்பட்டு அந்த லிங்க்கை `க்ளிக்’ செய்து அதில் கேட்டிருக்கும் விபரங்களைப் பூர்த்தி செய்துவிடுகின்றனர். அதில் வங்கியின் பாஸ்வேர்டு, ஒன்டைம் பாஸ்வேர்டு விபரங்களும் கேட்கப்பட்டிருந்தது. இது போன்று வந்த லிங்க்கை `க்ளிக்’ செய்து அதில் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்பி கடந்த மூன்று நாள்களில் வங்கி வாடிக்கையாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கின்றனர். இந்த மோசடியில் டி.வி நடிகை ஸ்வேதா மேனன் என்பவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

வங்கிப் பெயரில் வந்த போலி லிங்க்... 'க்ளிக்' செய்து பணத்தைப் பறிகொடுத்த டி.வி நடிகை உட்பட 40 பேர்

அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது, `` `வங்கிக் கணக்கில் கேஒய்சி மற்றும் பான் கார்டு விபரங்களை அப்டேட் செய்யுங்கள்’ என்று கூறி எனக்கு ஒரு மெசேஜ் வங்கியிலிருந்து வந்ததுபோல் வந்தது. நானும் வங்கியிலிருந்துதான் வந்திருக்கிறது என்று நம்பி அந்த லிங்க்கை க்ளிக் செய்து அதில் கேட்ட விபரங்களைப் பூர்த்தி செய்ததோடு பாஸ்வேர்டு, ஒன்டைம் பாஸ்வேர்டு விபரங்களையும் கொடுத்தேன். வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஒரு பெண்ணும் எனக்கு போன் செய்து பேசினார். எனது மொபைல் போனில் வந்துள்ள ஒன் டைம் பாஸ்வேர்டு விபரங்களை லிங்க் இணைப்பில் குறிப்பிடும்படி கேட்டுக்கொண்டார்.

நானும் அவ்வாறு செய்தேன். உடனே எனது வங்கிக் கணக்கில் இருந்த 57,636 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதே போன்று கடந்த மூன்று நாள்களில் ஏராளமானோர் போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் புகார்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் ஒன்றாகச் சேர்த்து விசாரித்துவருகின்றனர். மூன்று நாள்களில் ஒரே வங்கியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த மோசடியில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்திருக்கின்றனர். பொதுமக்கள் இது போன்று வரும் லிங்க்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், வங்கி பாஸ்வேர்டு விபரங்களை முன்பின் தெரியாத லிங்க்களில் குறிப்பிடவேண்டாம் என்று மும்பை போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மோசடி
மோசடி

அதோடு வங்கிகள் பொதுவாக பாஸ்வேர்டு விபரங்களை இது போன்று லிங்க் அனுப்பி கேட்பது கிடையாது என்றும், அப்படியே வந்தாலும் வங்கிக்கு நேரடியாகச் சென்று விசாரித்துவிட்டு தேவையான விபரங்களைக் கொடுக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். வங்கி அதிகாரிகளும் இதையே குறிப்பிட்டிருக்கின்றனர். இதே போன்று மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்று கூறி ஒரு லிங்க் அனுப்பி மோசடி செய்த சம்பவமும் மும்பையில் அதிக அளவில் நடந்திருக்கிறது. நன்றாகப் படித்தவர்களே இது போன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர்.