Published:Updated:

சென்னை: ஐஸ்பெட்டியில் சடலம்... போதை தகராறில் சக தொழிலாளியைக் கொலைசெய்த மீனவர் கைது!

க்ரைம்
News
க்ரைம்

தொழிலாளர்களுக்கிடையே நடந்த தகராறில் மீனவர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:

சென்னை: ஐஸ்பெட்டியில் சடலம்... போதை தகராறில் சக தொழிலாளியைக் கொலைசெய்த மீனவர் கைது!

தொழிலாளர்களுக்கிடையே நடந்த தகராறில் மீனவர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

க்ரைம்
News
க்ரைம்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் வேலு (47). இவர் மீன்பிடி தொழில் செய்துவந்தார். திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்த பரசுராமன் (47). இவரும் மீன்பிடி தொழில் செய்துவந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 27-ம் தேதி நண்பர்கள் வேலு, பரசுராமன் மற்றும் சிலர் ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் மீன்பிடி தொழிலுக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர். பின்னர் அன்றே கரைக்குத் திரும்பிய வேலு, சகாயம், பரசுராமன் ஆகிய மூன்று பேரும் முத்தையா தெருவிலுள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தினர்.

மது விற்பனை
மது விற்பனை

அப்போது போதையில் சகாயத்துக்கும் வேலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சகாயத்துக்கு ஆதரவாக பரசுராமன் பேசினார். பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். வேலு மட்டும் காசிமேடு நாகூரான் தோட்டம் ஃபைபர் படகுகள் நிறுத்தும் பகுதியில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பரசுராமனிடம் வேலு, `எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய்?’ எனக் கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த பரசுராமன் வேலுவைத் தாக்கியிருக்கிறார்.

இதில் சம்பவ இடத்திலேயே வேலு உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பரசுராமன், வேலுவின் சடலத்தை இரவு முழுவதும் ஃபைபர் படகிலுள்ள ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் வேலுவின் சடலத்தைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதைப் பார்த்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (52) என்பவர் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

க்ரைம்
க்ரைம்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வேலுவின் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையின்போது அவர் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பரசுராமனைக் கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மது போதையில் இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பரசுராமன் சிறையில் அடைக்கப்பட்டார்.