Published:Updated:

குளியலறையில் கேமரா; சுற்றுலா சென்ற தோழிகள் குழு அதிர்ச்சி, விசாரணை ஆரம்பம்!

சுற்றுலா சென்ற நண்பர்கள்
News
சுற்றுலா சென்ற நண்பர்கள்

சுற்றுலா சென்ற 15 தோழிகள், தாங்கள் தங்கியிருந்த வாடகை அறையின் குளியல் அறையில் மறைக்கப்பட்ட கேமரா பொருத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கென்னடி கால்வெல் என்ற பெண் சுற்றுலாவின்போது தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை டிக்டாக்கில் விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:

குளியலறையில் கேமரா; சுற்றுலா சென்ற தோழிகள் குழு அதிர்ச்சி, விசாரணை ஆரம்பம்!

சுற்றுலா சென்ற 15 தோழிகள், தாங்கள் தங்கியிருந்த வாடகை அறையின் குளியல் அறையில் மறைக்கப்பட்ட கேமரா பொருத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கென்னடி கால்வெல் என்ற பெண் சுற்றுலாவின்போது தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை டிக்டாக்கில் விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

சுற்றுலா சென்ற நண்பர்கள்
News
சுற்றுலா சென்ற நண்பர்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கோலம்பியாவுக்கு சுற்றுலா சென்ற 15 தோழிகள், தாங்கள் தங்கியிருந்த வாடகை அறையின் குளியல் அறையில் மறைக்கப்பட்ட கேமரா பொருத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கென்னடி கால்வெல் என்ற பெண் சுற்றுலாவின்போது தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றி டிக்டாக்கில் விடியோவாக பதிவிட்டுள்ளார்.

அதில், “நாங்கள் என் தோழியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குச் சென்றோம். அங்கு உள்ள Airbnb-ல் ஹோம்ஸ்டேயில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.

பட்டன் கேமரா
பட்டன் கேமரா

முதல் இரண்டு நாள்கள் நன்றாகத்தான் சென்றன. திடீரென எங்கள் தோழி ஒருவருக்கு அறையில் கேமரா இருப்பதை போன்று சந்தேகம் வந்தது. அவரின் தோழிகள் சுற்றுலா சென்றபோது இப்படி கேமரா இருந்துள்ளது. `அதனால் நாம் அறையை சோதனை செய்வோம்’ எனக்கூறி, அறையின் சிறிய பகுதியையும் விடாமல் சோதனை செய்தோம். இறுதியில் எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் புக் செய்திருந்த இரண்டு அறைகளின் குளியல் அறைகளிலும் சரியாக ஷவருக்கு நேராக சிறிய கேமராக்கள் மறைத்துவைப்பட்டிருந்தன.

உடனடியாக நாங்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தோம் அவர்கள் வந்து பாத்ரூமில் கேமரா இருப்பதை உறுதி செய்தனர் பின்னர் Airbnb மீதான விசாரணை தொடங்கியது. போலீஸார் கேமராவை எடுத்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். அதில் என்ன பதிவாகி இருந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Airbnb
Airbnb

இவரையடுத்து பேசியுள்ள மெலிசா, ``விடுமுறையை கழிக்க மிகவும் சந்தோஷமாக வெளியில் செல்லும் இடங்களில் இப்படி கேமரா வைத்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இனி வெளியில் சென்றாலே தங்களின் புகைப்படம் எங்காவது ஆன்லைனில் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற உணர்வுதான் முதலில் வரும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Airbnb மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதை அந்த நிர்வாகத்தினர் செய்தனரா அல்லது இதற்கு முன்னாள் அந்த அறையில் தங்கியிருந்த பிற சுற்றுலா பயணிகள் யாரேனும் செய்துள்ளனரா என்று தீவிர விசாராணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.