Published:Updated:

கேலி, கிண்டல்... தட்டிக்கேட்ட இளம்பெண் கம்பத்தில் கட்டி, தாக்கப்பட்ட கொடூரம்!- ஆட்டோ டிரைவர்கள் கைது

இளம்பெண் கம்பத்தில் கட்டி, தாக்கப்பட்ட கொடூரம்

கன்னியாகுமரியில் பெண்ணைக் கம்பத்தில் கட்டிவைத்து, தாக்கிய மூன்று ஆட்டோ டிரைவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

கேலி, கிண்டல்... தட்டிக்கேட்ட இளம்பெண் கம்பத்தில் கட்டி, தாக்கப்பட்ட கொடூரம்!- ஆட்டோ டிரைவர்கள் கைது

கன்னியாகுமரியில் பெண்ணைக் கம்பத்தில் கட்டிவைத்து, தாக்கிய மூன்று ஆட்டோ டிரைவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இளம்பெண் கம்பத்தில் கட்டி, தாக்கப்பட்ட கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் உமா (35) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கணவரை இழந்த இவர், தன் 9 வயது மகளுடன் வசித்துவருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண் துணை இல்லாமல் இருப்பதால், வீட்டில் மகளுக்குப் பாதுகாப்பில்லை என்று கருதிய உமா, தன் மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்கவைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில், மசாஜ் சென்டருக்கு உமா மேல்புறம் வழியாகச் செல்லும்போது, அந்தப் பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் தினசரி உமாவைக் கேலி, கிண்டல் செய்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது இரட்டை அர்த்தத்தில் பேசி அவரை மனதளவில் துன்புறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன உமா, தன் பாதுகாப்புக்காக கைவசம் மிளகாய்ப் பொடியும், கத்தியும் வைத்திருந்ததாகத் தெரிகிறது.

பெண்ணைக் கம்பத்தில் கட்டிவைத்த வழக்கில் கைதானவர்
பெண்ணைக் கம்பத்தில் கட்டிவைத்த வழக்கில் கைதானவர்

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் உமா வேலைக்குச் செல்வதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், மீண்டும் உமாவைப் பார்த்து கிண்டல் செய்தபடி அவரிடம் சீண்டலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உமா தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள்மீது எறிந்து... தன்னைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

இளம்பெண் கம்பத்தில் கட்டி, தாக்கப்பட்ட கொடூரம்
இளம்பெண் கம்பத்தில் கட்டி, தாக்கப்பட்ட கொடூரம்

உடனே அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒரு சிலர், உமாவைப் பலவந்தமாகப் பிடித்து கை, கால்களைத் துணியால் கட்டி... மின்கம்பத்தில் கட்டி அவரைக் கடுமையாகத் தாக்கியிருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டிவைக்கப்பட்டிருந்திருக்கிறார் உமா. அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அருமனை போலீஸார், மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த உமாவை மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கைதானவர்
கைதானவர்

விசாரணையின்போது, உமா அவருக்கு நேர்ந்த கொடுமைகளை போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆட்டோ ஓட்டுநர்கள் வினோத், சசி, விஜயகாந்த் ஆகிய மூவரைக் கைதுசெய்தனர்.

கைதானவர்
கைதானவர்

மேலும் தீபின், அரவிந்த் ஆகிய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.