Published:Updated:

மும்பையில் ஃபுட் டெலிவரி ஏஜென்ட்டுகள் மூலம் போதைப்பொருள் விற்பனை; தாவூத்தின் கூட்டாளி கைது!

தாவூத்தின் கூட்டாளி கைது
News
தாவூத்தின் கூட்டாளி கைது

ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மருந்து என்று கூறி, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டான்.

Published:Updated:

மும்பையில் ஃபுட் டெலிவரி ஏஜென்ட்டுகள் மூலம் போதைப்பொருள் விற்பனை; தாவூத்தின் கூட்டாளி கைது!

ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மருந்து என்று கூறி, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டான்.

தாவூத்தின் கூட்டாளி கைது
News
தாவூத்தின் கூட்டாளி கைது

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிம், தன்னுடைய கூட்டாளி கைலாஷ் ரஜபுத் மூலம் பல்வேறு நாடுகளில் போதைப்பொருள்களைக் கடத்தி விற்பனை செய்துவருகிறான். இந்தியாவில் கைலாஷ் ரஜபுத் கூட்டாளியாக இருப்பவன் அஸ்கர் அலி ஷெராஜி. போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்வதில் முக்கியப் பங்கு வகித்துவந்த அஸ்கர் அலி, போதைப்பொருள்களை அதிகமாக கூரியர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கைதேர்ந்தவன். இதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும், மும்பை போலீஸாரும் அஸ்கர் அலியை மூன்று முறை கைதுசெய்திருக்கின்றனர். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஜாமீனில் வந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தான்.

அஸ்கரோடு தொடர்புடைய `பிக் பாஸ்’ பிரபலம்
அஸ்கரோடு தொடர்புடைய `பிக் பாஸ்’ பிரபலம்

அவன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு அவனை, தேடப்படுபவர் என்று அறிவித்து, இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்திருந்தது. அஸ்கர் அலி மும்பை விமான நிலையம் வழியாக துபாய்க்குச் செல்ல முயன்றான். அப்போது அவனது பாஸ்போர்ட்டைச் சோதித்தபோது, அவனது பெயர் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்ததால், அவனை துபாய்க்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, மும்பை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இமிகிரேஷன் அதிகாரிகள் தன்னைப் பிடித்தவுடன், தனது போனிலிருந்த அனைத்துத் தகவல்களையும் அஸ்கர் அலி அழித்துவிட்டான்.

தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பிருக்கிறது என்பதை மறைப்பதற்காக மொபைல் தகவல்களை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவனை மும்பை போலீஸார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அஸ்கர் அலி இது வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ரு.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மருந்து எனத் தவறான தகவல் கூறி, மும்பை விமான நிலையம் வழியாக ஏற்றுமதி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

தாவூத்
தாவூத்

இதற்கு மும்பை விமான நிலையத்தில் இருக்கும் சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பது குறித்து அஸ்கர் அலியிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். தடயங்களை அழித்ததாக அஸ்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தை முதலீடு செய்வதற்காக `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரண்டு நடிகர்கள் மூலம், அஸ்கர் அலி ரெஸ்டாரன்ட்டுகளை மும்பை முழுக்க ஒரே பெயரில் திறக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறான். அதோடு உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்களைத் தங்களது போதைப்பொருளை சப்ளை செய்யவும் பயன்படுத்தியிருக்கிறான்.

அதாவது அஸ்கரின் ஆட்கள் குறிப்பிட்ட சில ஹோட்டல்களில் மொபைல் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்வார்கள். அந்த ஹோட்டல்கள் அனுப்பும் உணவுப்பொருளில் போதைப்பொருளைக் கொடுத்து டெலிவரி செய்யச் செய்துவிடுவார்கள். இதனால் போலீஸாரிடம் பிடிபடாமல் தப்பிக்க முடிகிறது.

அதோடு கிச்சன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அஸ்கர் அலி முதலீடு செய்திருக்கிறான். இதனால் அவன் சொல்படி அவனுடைய ஆட்கள் கொடுக்கும் பொருள்களை, கிச்சன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் டெலிவரிக்குக் கொடுத்துவிடுகின்றன.

அஸ்கர் அலி
அஸ்கர் அலி

அஸ்கர் அலியின் தலைவனாகக் கருதப்படும் கைலாஷ் ரஜபுத் போதைப்பொருள் மூலம் கிடைக்கும் பணத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து, பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். துபாய், பிரிட்டன், ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல் நாடுகளிலுள்ள போலி கம்பெனிகள் மூலம் இந்தியாவுக்குள் இந்தப் பணம் சட்டவிரோதமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.