கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சாதாரண பிரச்னைகள்கூட சில நேரங்களில் பெரிய அளவில் மாறிவிடுகின்றன. கோபத்தில் அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ரத்லம் மாவட்டத்திலுள்ள தலோட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு சிங் (35). இவரின் மனைவி தெஜ்குனாவார் (32). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு பிரச்னையில், சண்டை ஏற்படுவதுண்டு. நேற்று மாலை இருவரும் தங்களின் பிள்ளைகளை உறவினர் வீடன்டுக்கு அனுப்பிவைத்தனர். இன்று காலையில் அவர்கள் வீடு அடைத்தே இருந்தது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு, இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது பாலு சிங் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்தார். அவரின் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.

போலீஸாரின் விசாரணையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் பாலு சிங் கோடரி, கத்தி ஆகியவற்றால் தன்னுடைய மனைவியின் பிறப்புறுப்பில் வெட்டியிருக்கிறார். அதோடு கழுத்தையும் அறுத்திருக்கிறார். அப்படியும் கோபம் தீராமல் தன் மனைவியின் தாடையை உடைத்திருக்கிறார். கன்னத்தையும் வெட்டியிருக்கிறார். மேலும் கோபம் தீராமல் தன்னுடைய மனைவியின் இரு காதுகளையும் அறுத்து எடுத்திருக்கிறார். அதன் பிறகு வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இருவருடைய உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. முன்கூட்டியே திட்டமிட்டு பிள்ளைகள் இரண்டு பேரையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.