Published:Updated:

தாய்லாந்து நாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு... ஹைதராபாத் பேராசிரியர் கைது!

பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் கைது!
News
பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் கைது!

ஹைதராபாத்தில், தாய்லாந்து நாட்டு மாணவியைப் பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியரை போலீஸார் கைதுசெய்தனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் படித்துவரும் தாய்லாந்து நாட்டு மாணவியை, பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மாணவியை, பேராசிரியர் ஒருவர் புத்தகம் தருவதாக நேற்று வீட்டுக்கு அழைத்திருக்கிறார்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

அதையடுத்து அழைப்பின்பேரில் வீட்டுக்கு வந்த மாணவியை, பேராசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்தகைய செயலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இது பற்றி போலீஸில் புகாரளித்திருக்கிறார். மாணவியின் புகாரின்பேரில் சைபராபாத் போலீஸார், சம்பந்தப்பட்ட பேராசிரியரைக் கைதுசெய்தனர்.

வெளிநாட்டு மாணவியைப் பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் கைது!
வெளிநாட்டு மாணவியைப் பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் கைது!

இது குறித்து பேசிய மாதப்பூர் துணை போலீஸ் கமிஷனர் கே.ஷில்பவல்லி, ``இந்தச் சம்பவம் நேற்று நடந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர், புத்தகம் தருவதாகக் கூறி மாணவியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றிருக்கிறார். இதனால் அழுதுகொண்டிருந்த மாணவியிடம் தோழிகள் என்னவென்று கேட்டதையடுத்து, மாணவியும் உண்மையைக் கூறினார். தற்போது அவர் அளித்த புகார் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரை போலீஸ் காவலில் எடுத்திருக்கிறோம். மேலும், அவரை நாங்கள் சிறையில் அடைத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.