Published:Updated:

சென்னை: தொன்மையான மூன்று சிலைகள்... பிரான்ஸுக்குக் கடத்த முயற்சி!

சிலை கடத்தல்
News
சிலை கடத்தல்

பிரான்ஸுக்குக் கடத்த முயன்ற மூன்று தொன்மையான சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:

சென்னை: தொன்மையான மூன்று சிலைகள்... பிரான்ஸுக்குக் கடத்த முயற்சி!

பிரான்ஸுக்குக் கடத்த முயன்ற மூன்று தொன்மையான சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சிலை கடத்தல்
News
சிலை கடத்தல்

புதுச்சேரி, சப்ரெய்ன் தெருவில் தொன்மையான கோயில் சிலைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்தப் பிரிவின் இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில் கூடுதல் எஸ்.பி அசோக் நடராஜன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அங்கு நடராஜர், வீணாதாரா சிவன், விஷ்ணு ஆகிய மூன்று உலோக சிலைகள் இருந்தன. அந்த சிலைகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்ட சிலை
மீட்கப்பட்ட சிலை

மேலும் சிலைகளை வைத்திருந்த ஜோசப் கொலம்பானியிடம் போலீஸார் விசாரித்தபோது, அவரிடம் சிலைகள் தொடர்புடைய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த மூன்று சிலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தச் சிலைகள் தமிழக கோயில்களிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ததில் அவை 600 ஆண்டுகளுக்கு மேலாக தொன்மை வாய்ந்தது என்றும், சோழர்கள், விஜய நகர பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததும் என்று தெரியவந்துள்ளது.

இந்தச் சிலைகளை வைத்திருந்த ஜோசப் கொலம்பானியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தன்னுடைய தந்தை வைத்திருந்தாக தகவல் தெரிவித்தார். ஏற்கெனவே இந்த மூன்று சிலைகளையும் பிரான்ஸ் நாட்டுக்கு கடத்த முயற்சி நடந்ததும் தெரியவந்தது. தற்போதும் சிலைகள் கடத்த முயற்சி நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தக் கோயில்களைச் சேர்ந்தது என்று விசாரணை நடந்துவருகிறது.