Published:Updated:

சேலத்தில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி பிசினஸ் - என்ன சொல்கிறது காவல்துறை?!

 லாட்டரிச்சீட்டுகள்
News
லாட்டரிச்சீட்டுகள்

சேலம் மாநகரில் கடைகளில் தொடங்கி, தற்போது வீடுகளிலேயே லாட்டரி விற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. காவல்துறை என்ன சொல்கிறது?!

Published:Updated:

சேலத்தில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி பிசினஸ் - என்ன சொல்கிறது காவல்துறை?!

சேலம் மாநகரில் கடைகளில் தொடங்கி, தற்போது வீடுகளிலேயே லாட்டரி விற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. காவல்துறை என்ன சொல்கிறது?!

 லாட்டரிச்சீட்டுகள்
News
லாட்டரிச்சீட்டுகள்

தொழில் நகரமாம் சேலம் சமீபகாலமாக கொலை, கொள்ளை, சூதாட்டம் போன்றவற்றில் தலைசிறந்த நகரமாக மாறிவருகிறது. சேலம் மாநகரப் பகுதிகளில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை என்பது கோலோச்சி நிற்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் டீக்கடை, மளிகைக்கடை போன்றவற்றில் நடந்துவந்த லாட்டரி விற்பனை, தற்போது வீடுகளிலேயே அமர்ந்து குடிசைத் தொழில் போன்று விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இது குறித்த தகவல்கள் காவல் துறையினருக்குத் தெரிந்தும் அவ்வப்போது முக்கியப் புள்ளிகளை தப்பிக்கவைத்துவிட்டு சேல்ஸ்மேனாகத் திகழும் நபர்களை மட்டும் பிடித்து வழக்குபோடுவது என்பது வழக்கமாக இருந்துவருகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சேலத்தில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி பிசினஸ் - என்ன சொல்கிறது காவல்துறை?!

சேலத்தில் லாட்டரி விற்பனை மூலம் பல பணக்கார முதலைகள் ஒரு நாளைக்கு பல கோடிகள் சம்பாதிக்கின்றனராம். அதில், சேலம் மாநகர காவல் எல்லைகளான தாதாகப்பட்டி, கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, சேலம் கோட்டைப் பகுதி, அம்மாபேட்டை போன்றவற்றில்தான் விற்பனை என்பது அதிகம் காணப்படுகிறது. சேலம் மாநகரைப் பொறுத்தவரை சீலநாயக்கன்பட்டி சதிஸ் எனும் நபர் மீது சேலம் மாநகர காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் லாட்டரி விற்பனைக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், லாட்டரியில் கோலோச்சும் ஒருசிலரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

எனினும், லோக்கல் அரசியல்வாதிகளின் சிபாரிசு காரணமாக போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. விற்பனை செய்யும் நபர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

அதேபோன்று அஸ்தம்பட்டி, சூரமங்கலம் காவல் எல்லையில், சேலம் புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, ரயில் நிலையம் பகுதிகளில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறதாம்.

மாநகரத் தலைமையக காவல் துணை ஆணையர் இராதாகிருக்ஷ்ணன்
மாநகரத் தலைமையக காவல் துணை ஆணையர் இராதாகிருக்ஷ்ணன்

மாநகரப் பகுதிகளில் பெரும் புள்ளிகளுக்குக் கீழ் லாட்டரி விற்பனை செய்யக்கூடிய நபர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள டீக்கடை, சலூன்கடை, மளிகைக்கடையில் நின்றுகொண்டு லாட்டரி நம்பர் எழுதித் தருவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

எதிர்பாராதவிதமாக போலிஸ் பிடியில் சிக்கினாலும், வழக்கிலிருந்து வெளியில் எடுப்பது முதல் அனைத்துச் செலவுகளையும் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் பார்த்துக்கொள்கிறார்களாம்.

மேலும் தாதகாப்பட்டி, செவ்வாய்பேட்டை, சீலநாயக்கன்பட்டி, கிச்சிப்பாளையம் போன்ற பகுதிகளில் லாட்டரி வியாபாரம் என்பது களைகட்டவருகிறது. காலை 9 மணிக்கெல்லாம் ஆரம்பிக்கும் லாட்டரி பிசினஸ் மதியம் 3 மணிக்குள் முடிவடைகிறது. இதற்குள் ஒரு சேல்ஸ்மேனிடம் கிட்டத்தட்ட லட்ச கணக்கில் பணம் புரளுகிறதாம். இதனால் சமூக ஆர்வலர்கள் பலர் லாட்டரி விற்பனையைத் தடுக்கக் கோரி புகார் எழுப்பிவருகின்றனர்.

இது குறித்து மாநகர தலைமையக காவல் துணை ஆணையர் இராதாகிருஷ்ணன் பேசியபோது, “தற்போது சேலம் மாநகரத்தில் லாட்டரி விற்பனை என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டுவருகிறது. அடிக்கடி ரெய்டு மூலம் லாட்டரி விற்பனை செய்யும் நபர்களைப் பிடித்து குண்டாஸ் போட்டு வருகிறோம். இருப்பினும், முக்கிய வியாபாரிகள் இருப்பின் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.