Published:Updated:

காஸ் அடுப்பில் சாராயம் காய்ச்சிய பெண் கைது - வீட்டைக் காட்டிக்கொடுத்த வாடை!

சாராய வியாபாரி மீனா
News
சாராய வியாபாரி மீனா

வீட்டுக்குள்ளேயே காஸ் அடுப்பில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த பெண் சாராய வியாபாரியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

காஸ் அடுப்பில் சாராயம் காய்ச்சிய பெண் கைது - வீட்டைக் காட்டிக்கொடுத்த வாடை!

வீட்டுக்குள்ளேயே காஸ் அடுப்பில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த பெண் சாராய வியாபாரியை போலீஸார் கைதுசெய்தனர்.

சாராய வியாபாரி மீனா
News
சாராய வியாபாரி மீனா

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் சாராய தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது காவல்துறை. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்ட காவல்துறையினரும் 40-க்கும் மேற்பட்டோரை சாராய வழக்கில் கைதுசெய்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஆரணி அருகிலுள்ள வடுகசாத்து கிராமத்தில், ஆரணி தாலுகா போலீஸார் சாராய வேட்டையில் ஈடுபட்டபோது, மீனா என்ற பெண் அவரின் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்தது.

சாராய வியாபாரி மீனா
சாராய வியாபாரி மீனா

வாடையை வைத்து வீட்டைக் கண்டுபிடித்த போலீஸார், மீனாவின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, காஸ் அடுப்பில் மீனா சாராயம் காய்ச்சுவதைக் கண்டு போலீஸார் அதிர்ந்துபோயினர். அதுவும் சாதாரண பாத்திரத்தில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தார். இதையடுத்து, தப்பிஓட முயன்ற அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்த போலீஸார், காஸ் அடுப்பு, பாத்திரம், 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அப்போது, தன்னை விட்டுவிடும்படி மீனா கெஞ்சினார். ஆனாலும், போலீஸார் அவரைக் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.