Published:Updated:

கல்லூரி முதல்வரை மாணவி காலில் விழக் கட்டாயப்படுத்திய ஏபிவிபி தலைவர் - தேசிய மாணவர் சங்கம் கண்டனம்

ஏ.பி.வி.பி
News
ஏ.பி.வி.பி

குஜராத்தில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால், பாலிடெக்னிக் கல்லூரி பெண் முதல்வரை மாணவியின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

கல்லூரி முதல்வரை மாணவி காலில் விழக் கட்டாயப்படுத்திய ஏபிவிபி தலைவர் - தேசிய மாணவர் சங்கம் கண்டனம்

குஜராத்தில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால், பாலிடெக்னிக் கல்லூரி பெண் முதல்வரை மாணவியின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.பி.வி.பி
News
ஏ.பி.வி.பி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள எஸ்.ஏ.எல் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால் மற்றும் பிற உறுப்பினர்கள் சேர்ந்து, கல்லூரிப் பெண் முதல்வரை மாணவி ஒருவரின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

அந்த வீடியோவில், கல்லூரிப் பெண் முதல்வர் மாணவியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவிக் சோலங்கி, `இது ஒரு வெட்கக்கேடான செயல்!' என அறிக்கைவிட்டிருக்கிறார்.

மாணவி காலில் விழுந்த முதல்வர்
மாணவி காலில் விழுந்த முதல்வர்

ஏ.பி.வி.பி தலைவரின் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஏ.பி.வி.பி-யின் பொதுச்செயலாளர் பிரார்த்தனா அமீன், ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வாலின் இத்தகைய செயலுக்கு மன்னிப்புக் கேட்டு நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதமான பாரம்பர்யத்தை ஏ.பி.வி.பி நம்புகிறது. இதில், ஜெய்ஸ்வால் பெரிய தவறு செய்துவிட்டார். அதற்காக அவரை அமைப்பிலிருந்து நீக்கியிருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.