Published:Updated:

வாட்ஸ்அப், டெலிகிராமில் வந்த வேலை வாய்ப்பு தகவல்! - மோசடி கும்பலிடம் ரூ.4 லட்சத்தை இழந்த மாணவி

மோசடி
News
மோசடி

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை தேடிய பிஹெச்.டி மாணவி, மோசடி கும்பலிடம் ரூ.4 லட்சத்தைப் பறிகொடுத்திருக்கும் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

வாட்ஸ்அப், டெலிகிராமில் வந்த வேலை வாய்ப்பு தகவல்! - மோசடி கும்பலிடம் ரூ.4 லட்சத்தை இழந்த மாணவி

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை தேடிய பிஹெச்.டி மாணவி, மோசடி கும்பலிடம் ரூ.4 லட்சத்தைப் பறிகொடுத்திருக்கும் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மோசடி
News
மோசடி

புதுச்சேரி, வில்லியனூர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த நாகேஸ்வரி, காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பிஹெச்.டி படித்து வருகிறார். ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்த இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு, சில தினங்களுக்கு முன்பு வேலை வாய்ப்பு தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதில் முன்பணம் செலுத்தி வேலையில் சேர்ந்து சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்ததால், ஆரம்பத்தில் சிறிய தொகையைக் கட்டி சேர்ந்திருக்கிறார். அதற்கேற்றபடி வருவாய் வந்ததால், படிப்படியாக பெரிய அளவில் தொகையை முன்பணமாக செலுத்தியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் ரூ.4 லட்சம் வரை டெபாசிட் செய்த அவர், தனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என்று குழப்பமடைந்திருக்கிறார். அதையடுத்து அந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. உடனே தான் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொண்ட அந்த மாணவி, சைபர் க்ரைம் காவல் பிரிவில் ஆன்லைன் மூலம் புகாரளித்திருந்தார். அந்தப் புகார் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மோசடி
மோசடி

மாணவி அளித்தப் புகாரில், “என் பெயர் நாகேஸ்வரி. என்.ஐ.டி புதுச்சேரியில் பி.ஹெச்.டி படித்து வருகிறேன். ஆராய்ச்சி படிப்புக்குப் பணம் தேவை என்பதால், பகுதி நேரமாக ஏதேனும் வேலை வாய்ப்பு உள்ளதா என்பதை இணையத்தில் தேடி சமூக ஊடகங்களில் பதிவுசெய்திருந்தேன். ஏப்ரல் 10, 2023 அன்று, டெலிகிராமில் தொடர்ச்சியான பணியை பகுதி நேரமாகச் செய்யும் வாட்ஸ்-அப் செய்தி எனக்கு வந்தது. அதில் ஆரம்பத்தில் ரூ.1,000/- முதல் ரூ.3,000/- வரை சிறிய தொகைகளை டெபாசிட் செய்தேன். அதில் லாபம் கிடைத்ததால் 11 ஏப்ரல் 2023 அன்று ரூ.30,000/- ஐ செலுத்தி பணியைத் தொடர்ந்தேன். நான் டெபாசிட் செய்த ரூ.30,000/- ஐ ரூ.6,000/- லாபத்துடன் திரும்பப் பெறுவதற்கு இதற்கு இணையான பணியை செய்யச் சொன்னார்கள். அதையடுத்து என்னை நான்கு பேர் கொண்ட டெலிகிராம் குழுவில் சேர்த்தனர். 

பின்னர் அவர்கள் ரூ.70,000/- மதிப்புள்ள பணியைச் செய்யச் சொன்னார்கள், அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அதற்கு குழு உறுப்பினர்கள் நான்கு பேருடன் சேர்ந்து பணியை எளிதில் முடித்துவிடலாம் என்று கூறினார்கள். அப்படி செய்யவில்லை என்றால் என்னிடமிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்றார்கள். அதனால் வேறு வழியின்றி டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதற்காக நான் ரூ. 70,000/-ஐ செலுத்தினேன்.  ஆனால் ரூ.70,000/- டெபாசிட் செய்யும் பணியில் குழுவில் இருந்த உறுப்பினர் ஒருவரால் சில சிக்கல்கள் எழுந்தன.  அதனால் என்னால்தான் நஷ்டமானது என கூறி நான் ஏற்கெனவே செலுத்திய ரூ.70,000/- ரூபாயை முடக்கிவிட்டனர். இழந்த பணத்தை திரும்பப் பெறவும், குழுவில் ஏற்பட்ட தவறை சரி செய்யவும் மீண்டும் ஒரு பணியினை எடுத்துச் செய்ய  ரூ.1,50,000/- லட்சம் செலுத்தச் சொன்னார்கள்.

மாதிரி படம்
மாதிரி படம்

ஏற்கெனவே டெபாசிட் செய்த பணத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் நான் ரூ.1,50,000/- லட்சம் பணத்தை செலுத்த ஒப்புக்கொண்டேன். அதேபோல குழுவில் இருந்த மற்ற நபர்கள் அனைவரும் அமைதியாகவும், பணத்தை செலுத்தவும் செய்தார்கள். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர்கள் எனக்கு UPI-ன் இணைப்பைக் கொடுப்பார்கள், அது 10 நிமிடங்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும், அந்த 10 நிமிடங்களுக்குள் நான் செலுத்த வேண்டும்.  அதன்பின்னர் ரூ. 1,50,000/- ஐ கொஞ்சம் கொஞ்சமாக செலுத்திவிட்டேன். எனது டெபாசிட் பணத்தை திரும்பப் பெறும்போது ரூ.76,449/- வரி செலுத்துமாறு கேட்டனர்.  பின்னர் கிரெடிட் ஸ்கோர் குறைவு என்று சொன்னார்கள். 

என்னால் எனது டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியாது என்று கூறினார்கள்.  ஆனால் ஏப்ரல், 15, 2023 அன்று கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கும் போது அது 100 இருந்தது. ஆனால் மாலை 75 ஆக மாறி இருந்தது. மேலும் எனக்குத் தெரியாமல் எனது யூசர் நேம் பாஸ்வேர்டை மாற்றினார்கள். அது குறித்து நான் கேள்வி எழுப்பிய பிறகே எனக்கு புதிய கடவுச்சொல்லைக் கொடுத்தனர்.  அதன்பிறகு நான் டெபாசிட் செய்த ரூ.4,00,000 லட்சத்தை திரும்பப் பெற வேண்டுமென்றால் ரூ.2,50,000/- லட்சத்துக்கான ஒரே பணியை எடுத்து செய்யும்படி கூறினர்.

பணியின்போதான உரையாடல்கள், கட்டண பரிவர்த்தனைகள், குழு சுயவிவரங்கள், பணி பந்தயம் கட்டும் செயல்முறை ஆகியவற்றின் ஆதாரங்களை இதனுடன் இணைத்துள்ளேன். அவர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக, இறுதிப் பணித் தொகையான ரூ.2,50,000/- லட்சம் டெபாசிட் செய்வதற்கு 3 நாள்கள் அவகாசம் கேட்டுள்ளேன். ஆகவே, தயவுசெய்து நடவடிக்கை எடுத்து எனக்குத் தேவையான உதவி செய்யுங்கள்.  நான் டெபாசிட் செய்த பணத்தை திருப்பப் பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பணம் எனது நட்பு வட்டத்திலிருந்து கடன் வாங்கியது. அந்த கும்பல் தங்களது செயல்பாடுகளை முடக்கி, கணக்குகளை நீக்குவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.