Published:Updated:

புதுக்கோட்டை: `ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் - 2 பேர் கைது; தனியார் தங்கும் விடுதிக்கு சீல்!

சீல்  வைக்கப்பட்ட தங்கும் விடுதி
News
சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதி

தனியார் தங்கும் விடுதியில், `மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் தனியாகவும், தங்கும் விடுதிகளிலும் `ஸ்பா’ என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் இயங்கிவருகின்றன. இங்கு சில இடங்களில் `மசாஜ்’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக டவுன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, புகார் பெறப்பட்ட பகுதிகளிலுள்ள மசாஜ் சென்டர்களில், போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் தங்கும் விடுதியில், `மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மசாஜ் சென்டரின் உரிமையாளரான திண்டுக்கல்லைச் சேர்ந்த சண்முகசுந்தரம், மேலாளராகப் பணிபுரிந்த தருமபுரியைச் சேர்ந்த சுதா (37) ஆகிய இருவரையும் டவுன் போலீஸார், கைதுசெய்தனர்.

புதுக்கோட்டை: `ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் - 2 பேர் கைது; தனியார் தங்கும் விடுதிக்கு சீல்!

அப்போது, பாலியல் தொழிலுக்கு இவர்கள் பயன்படுத்தி வந்த நான்கு இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில்தான், ஸ்பா இயங்கிவந்த, தங்கும் விடுதிக்கு உரிய உரிமம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஏற்கெனவே வாங்கிய உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவின்படி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைத்துள்ளனர். புதுக்கோட்டையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்த பாலியல் தொழில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.