Published:Updated:

`அதிபர் பைடனைக் கொல்ல வேண்டும்!' - இந்திய வம்சாவளி இளைஞரால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு

சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி) - அமெரிக்கா
News
சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி) - அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ட்ரக்கில் ஹிட்லர் கொடியுடன் வெள்ளை மாளிகை அருகே விபத்தை ஏற்படுத்தினார்.

Published:Updated:

`அதிபர் பைடனைக் கொல்ல வேண்டும்!' - இந்திய வம்சாவளி இளைஞரால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ட்ரக்கில் ஹிட்லர் கொடியுடன் வெள்ளை மாளிகை அருகே விபத்தை ஏற்படுத்தினார்.

சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி) - அமெரிக்கா
News
சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி) - அமெரிக்கா

அமெரிக்காவில் 19 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிபர் ஜோ பைடனைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கப்போவதாக வெள்ளை மாளிகை தடுப்புச்சுவரில் ஹிட்லர் கொடி தாங்கிய ட்ரக்கால் (Truck) மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில், சாய் வர்ஷித் கந்துலா (Sai Varshith Kandula) எனும் இளைஞர், வெள்ளை மாளிகையிலுள்ள லாஃபாயெட் பூங்காவின் (Lafayette Park) வடக்குப் பகுதியிலுள்ள நடைபாதையில் பாதுகாப்புத் தடைகள்மீது ட்ரக்கில் மோதியிருக்கிறார்.

அமெரிக்கா
அமெரிக்கா

இது குறித்து தகவலிருந்த போலீஸார் சாய் வர்ஷித் கந்துலாவைக் கைதுசெய்தனர். இதையடுத்து நடைபாதை மூடப்பட்டது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் சாய் வர்ஷித் கந்துலா மீது கிரிமினல் புகார் அளிக்கப்பட்டு, வாஷிங்டன்னிலுள்ள நீதிமன்றத்தில் அவருக்கெதிராக ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த ஆவணத்தின்படி, திங்கள்கிழமை இரவன்று செயின்ட் லூயிஸிலிருந்து டல்லஸ் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய சாய் வர்ஷித் கந்துலா, ட்ரக் ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அன்றிரவே வெள்ளை மாளிகை அருகே நடைபாதையில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சாய் வர்ஷித் கந்துலா. அதன் பின்னர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சாய் வர்ஷித் கந்துலா, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்வதே தன்னுடைய இலக்கு என்று விசாரணையில் தெரிவித்திருக்கிறார். மேலும் இதில் அதிபரைக் கொல்வேன் என்றும், அதற்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களையும் தாக்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.

சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி)
சாய் வர்ஷித் கந்துலா (இந்திய வம்சாவளி)

அதுமட்டுமல்லாமல் ஹிட்லரின் பெருமை பேசும் இவர், ஆன்லைனில் நாஜிக்களின் சின்னம்கொண்ட கொடியை வாங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, சாய் வர்ஷித் கந்துலாவின் நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி, மிக அமைதியானவர் என்றெல்லாம் கூறிவருகின்றனர். இன்னொருபக்கம், அவரின் மனநலன் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்றும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.