Published:Updated:

கிருஷ்ணகிரி கொடூரம்: காதல் திருமணம் செய்த மகன் ஆணவக்கொலை - பெற்ற தாயையும் கொன்று வெறியாட்டம்!

ஆணவக்கொலை
News
ஆணவக்கொலை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், சாதி என்ற பெயரில் ஆணவக்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது வேதனைக்குரியது.

Published:Updated:

கிருஷ்ணகிரி கொடூரம்: காதல் திருமணம் செய்த மகன் ஆணவக்கொலை - பெற்ற தாயையும் கொன்று வெறியாட்டம்!

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், சாதி என்ற பெயரில் ஆணவக்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது வேதனைக்குரியது.

ஆணவக்கொலை
News
ஆணவக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணியின் மகன் சுபாஷ் (25). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், தன்னுடன் வேலை செய்துவந்த அனுஷா என்ற பெண்ணைக் காதலித்துவந்திருக்கிறார் சுபாஷ்.

தந்தை தண்டபாணியின் எதிர்ப்பை மீறி, மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அனுஷாவை சில நாள்களுக்கு முன்பு, சுபாஷ் திருமணம் செய்திருக்கிறார். நேற்று, சொந்த ஊருக்கு வந்த சுபாஷ் மற்றும் அனுஷா, அந்தப் பகுதியிலுள்ள தனது பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்) வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

இது குறித்து தகவலறிந்த தண்டபாணி, இரவு நேரத்தில் கண்ணம்மா வீட்டுக்கு வந்து அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அரிவாளால் மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறார்.

இறந்த சுபாஷ்.
இறந்த சுபாஷ்.

தண்டபாணியின் வெறியாட்டத்தால், சுபாஷ், கண்ணம்மா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த அனுஷா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஊத்தங்கரை போலீஸார் தப்பியோடிய தண்டபாணியைத் தேடிவருகின்றனர்.

மாற்று சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததற்காக, தந்தையே மகனை ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், சாதி என்ற பெயரில் ஆணவக்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது வேதனைக்குரியது.