Published:Updated:

மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - மும்பையில் அதிர்ச்சி

 பாலியல் வன்கொடுமை
News
பாலியல் வன்கொடுமை

மும்பையில் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரைக் கைதுசெய்வதில் போலீஸார் தாமதம் செய்திருக்கின்றனர்.

Published:Updated:

மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - மும்பையில் அதிர்ச்சி

மும்பையில் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரைக் கைதுசெய்வதில் போலீஸார் தாமதம் செய்திருக்கின்றனர்.

 பாலியல் வன்கொடுமை
News
பாலியல் வன்கொடுமை

மும்பை, சர்ச்கேட்டிலுள்ள கல்லூரி ஒன்றில் ஜர்னலிசம் படித்துவரும் 24 வயது மாணவி, கடந்த ஆண்டுதான் மும்பைக்கு வந்திருக்கிறார். அவர் தென்மும்பையில் தங்க வீடு தேடினார். இதில் பிரசாத் பாண்டே என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரின் அறிமுகம் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்தது.

மாணவிக்கு வீடு வாடகைக்குக் கிடைக்க பாண்டே உதவினார். அதன் பிறகும் தொடர்ந்து அந்த மாணவியை பாண்டே பின்தொடர்ந்துகொண்டேயிருந்தார். அடிக்கடி போன் செய்வது, மெசேஜ் அனுப்புவது போன்ற காரியத்தில் ஈடுபட்டுவந்தார். அதோடு மாணவியின் கல்லூரி, வீட்டுக்கு வெளியிலும் அடிக்கடி பாண்டே நிற்க ஆரம்பித்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மாணவி இங்கு வராதீர்கள் என்று சொன்ன பிறகும் பாண்டே தன்னுடைய வேலையை நிறுத்திக்கொள்ளவில்லை. கடந்த 14-ம் தேதி திடீரென பாண்டே மாணவிக்கு போன் செய்து, `மிகவும் அவசரம்’ என்று கூறி அழைத்துப் பேசினார். இருவரும் சந்தித்துப் பேசியபோது மாணவிக்கு பாண்டே குடிக்க குளிர்பானம் வாங்கிக்கொடுத்தார். அதைக் குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்க நிலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவரை பாண்டே ஹோட்டல் அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவும் எடுத்துக்கொண்டார். மாணவி மயக்கம் தெளிந்தபோது அவரிடம் வீடியோவைக் காட்டி, `நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால், வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார்.

போலீஸ்
போலீஸ்

ஆனால், மாணவி இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் ஒரு வாரம் கழித்துத்தான் இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். அதோடு குற்றவாளியையும் கைதுசெய்யவில்லை. இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, ``குற்றவாளி பாண்டே கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு பாண்டே கைதுசெய்யப்படுவார்'' என்று தெரிவித்தனர்.