Published:Updated:

கடலூர்: நீதி கேட்டுச் சென்ற காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை - இரண்டாவது காதலனுடன் பெண் கைது!

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
News
பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

``நான் இருக்கும்போதே இன்னொருவருடன் எப்படிப் பழகலாம்” என்று கேட்ட காதலனை, எரித்துக் கொலைசெய்த பெண்ணையும், அவரின் காதலரையும் கைதுசெய்திருக்கிறது கள்ளக்குறிச்சி காவல்துறை.

Published:Updated:

கடலூர்: நீதி கேட்டுச் சென்ற காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை - இரண்டாவது காதலனுடன் பெண் கைது!

``நான் இருக்கும்போதே இன்னொருவருடன் எப்படிப் பழகலாம்” என்று கேட்ட காதலனை, எரித்துக் கொலைசெய்த பெண்ணையும், அவரின் காதலரையும் கைதுசெய்திருக்கிறது கள்ளக்குறிச்சி காவல்துறை.

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
News
பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அன்பழகன், கவிதா தம்பதி. எட்ட்ய் ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய கவிதா, விருத்தாசலத்துக்குச் சென்றார்.

கைதுசெய்யப்பட்ட கவிதா
கைதுசெய்யப்பட்ட கவிதா

அங்கு என்ன செய்வது என்று தெரியாத கவிதா, பாலக்கரையில் பொரிக்கடை வைத்திருந்த ஆறுமுகம் என்பவரிடம் வேலை கேட்டிருக்கிறார்.  ஆறுமுகம் ஏற்கெனவே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்தவர் என்பதால், கவிதாவுக்கு உடனே வேலை கொடுத்து தனது வீட்டிலேயே தங்கவைத்திருக்கிறார். நாளடைவில் அந்த வீட்டில் இருவரும் கணவன், மனைவியாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

பொரிக்கடை வியாபாரத்துக்காக ஆறுமுகம் திருவிழாக்களுக்கு செல்லும்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த  பு.கிள்ளனுர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தி என்பவர் அறிமுகம் ஆகியிருக்கிறார். அதையடுத்து ஆறுமுகம், கவிதா, வைத்தி மூவரும் திருவிழாக்களில் பொரிக்கடை வைத்து வியாபாரம் செய்துவந்திருக்கின்றனர். அப்படியான சமயங்களில் கவிதாவை  வியாபாரத்தை கவனிக்க சொல்லிவிட்டு, பிக்பாக்கெட் குற்றவாளிகளான ஆறுமுகமும் வைத்தியும் பிக்பாக்கெட்  மற்றும் திருட்டு தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆறுமுகம்
கொலை செய்யப்பட்ட ஆறுமுகம்

ஒருகட்டத்தில் கவிதா மீது ஆசைப்பட்ட வைத்தி அவருடன் ஆசையாகப் பேசியதுடன், திருடும் பணத்தில் ஆறுமுகத்தைவிட கூடுதலாகக் கொடுத்திருக்கிறார். அதையடுத்து வைத்தியின் ஆசைக்குச் சம்மதம் தெரிவித்த கவிதாவும், அவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்திருக்கிறார்.

இவர்களின் ரகசிய நட்பு ஆறுமுகத்துக்குத் தெரியவந்ததால் வைத்தியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆறுமுகத்திடம் சண்டை போட்ட கவிதா, தன் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு உளுந்தூர்பேட்டையை அடுத்திருக்கும் பு.கிள்ளனூர் கிராமத்திலுள்ள வைத்தி வீட்டுக்குச் சென்று அவருடனேயே தங்கியிருக்கிறார். கவிதா கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக நினைத்த ஆறுமுகத்துக்கு, அவர் வைத்தி வீட்டில் தங்கியிருப்பது தெரியவர உஷ்ணமாகியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட வைத்தி
கைதுசெய்யப்பட்ட வைத்தி

உடனே வைத்தி வீட்டுக்குச் சென்ற ஆறுமுகம், “நான் இருக்கும்போதே உனக்கு இன்னொரு ஆளா...  நீ ஆதரவில்லாமல் இருக்கும்போது நான்தான் உனக்கு உதவி செய்தேன். இப்போது நீ இப்படிச் செய்வது நியாயமா ?” என்று கவிதாவிடம் கேட்டிருக்கிறார். அதேபோல, ``நீயெல்லாம் நண்பனா... எனக்கு துரோகம் செய்துவிட்டாயே..?” என்று வைத்தியிடமும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து, “எனக்கு துரோகம் செய்த நீ உயிரோடு இருக்கக் கூடாது” என்று கூறிய ஆறுமுகம், தான் கையுடன் கொண்டுவந்திருந்த பெட்ரோலை கவிதா மீது ஊற்ற முயன்றிருக்கிறார்.

அப்போது டென்ஷனான வைத்தியும் கவிதாவும் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கிக் கொண்டு ஆறுமுகத்தை தாக்கியிருக்கின்றனர். அதில் நிலைதடுமாறிய ஆறுமுகத்தின் மீது அந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்திருக்கின்றனர். வலியால் அலறிய ஆறுமுகம் சற்று நேரத்தில் மயங்கிக் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரிடம், ஆறுமுகமே தனக்கு தீவைத்துக்கொண்டதாக வைத்தியும் கவிதாவும் தெரிவித்தனர்.

அத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று அனுமதித்திருக்கின்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்தில் உயிரிழந்தார் ஆறுமுகம். உயிரிழப்பதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கவிதாவையும் அவருடைய  புதிய காதலன் வைத்தியையும் கைதுசெய்த உளுந்தூர்பேட்டை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.