Published:Updated:

கரூர்: பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் வெற்றி - இரண்டு அதிகாரிகள் டிஸ்மிஸ்!

கிருஷ்ணராயபுரம்
News
கிருஷ்ணராயபுரம்

2019-ம் வருடம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடந்த குளறுபடிக்குக் காரணமான இரண்டு அரசு அதிகாரிகளை, கரூர் மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:

கரூர்: பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் வெற்றி - இரண்டு அதிகாரிகள் டிஸ்மிஸ்!

2019-ம் வருடம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடந்த குளறுபடிக்குக் காரணமான இரண்டு அரசு அதிகாரிகளை, கரூர் மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

கிருஷ்ணராயபுரம்
News
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சித்தலவாய் ஊராட்சியிலுள்ள ஆறாவது வார்டு, 2019-ம் வருடம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வார்டில் இரண்டு ஆண்கள் போட்டியிட்டனர். இதில், கிருஷ்ணமூர்த்தி என்ற ஆண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் சித்தலவாய் ஊராட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிருஷ்ணராயபுரம் துரை.வேம்பையன்
கிருஷ்ணராயபுரம் துரை.வேம்பையன்

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆண் ஒருவர் வெற்றி பெற்றது எப்படி என்று கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அப்போது பணியில் கவனம் குறைவாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாசலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகிய இரண்டு பேரையும், அரசுப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டிருக்கிறார். தற்போது, வெங்கடாசலம், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில், சென்னை தெற்கு மண்டலத்தில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.