Published:Updated:

கரூர்: ஆன்லைன் விளையாட்டு விபரீதம்; வீட்டைவிட்டுச் சென்ற பள்ளி மாணவர்! - அதிர்ச்சியில் பெற்றோர்

தான்தோன்றிமலை காவல் நிலையம்
News
தான்தோன்றிமலை காவல் நிலையம் ( நா.ராஜமுருகன் )

வீட்டைவிட்டு வெளியே போன சுரேஷ், எங்கு போவது என்று தெரியாமல் திருச்சி பேருந்தில் ஏறி, திருச்சிக்குப் போயிருக்கிறார். அவரிடம் நைச்சியமாக பேச்சுக் கொடுத்த ஒரு பெரியவர், அவர் சொன்ன விஷயங்களை கேட்டதும், நைசாகப் பேசி அவரைக் காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்திருக்கிறார்.

Published:Updated:

கரூர்: ஆன்லைன் விளையாட்டு விபரீதம்; வீட்டைவிட்டுச் சென்ற பள்ளி மாணவர்! - அதிர்ச்சியில் பெற்றோர்

வீட்டைவிட்டு வெளியே போன சுரேஷ், எங்கு போவது என்று தெரியாமல் திருச்சி பேருந்தில் ஏறி, திருச்சிக்குப் போயிருக்கிறார். அவரிடம் நைச்சியமாக பேச்சுக் கொடுத்த ஒரு பெரியவர், அவர் சொன்ன விஷயங்களை கேட்டதும், நைசாகப் பேசி அவரைக் காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்திருக்கிறார்.

தான்தோன்றிமலை காவல் நிலையம்
News
தான்தோன்றிமலை காவல் நிலையம் ( நா.ராஜமுருகன் )

கரூரில் ஆன்லைன் விளையாட்டில் சில புள்ளிகளைக் கடனாக கேட்டு வாங்கி விளையாடி, அதைத் திருப்பிக் கொடுக்காததால், அந்த மாணவரை, கடன் கொடுத்த மாணவர்கள் மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இதனால் பயந்துகொண்டு, வீடியோவில் தனது பிரச்னையைப் பேசி அனுப்பிவிட்டு, 100 ரூபாய் பணத்தோடு அந்த மாணவர் வீட்டைவிட்டுச் சென்ற சம்பவம், பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்
கரூர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் அனைத்தும் கடந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. இதனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கியதால், தமிழகம் முழுக்க உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்தனர்.

தான்தோன்றிமலை
தான்தோன்றிமலை
நா.ராஜமுருகன்

அந்த வகையில்தான், சுரேஷுக்கும் அவரது பெற்றோர், ஆன்லைன் கிளாஸை அட்டெண்ட் செய்வதற்கு வசதியாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட்போன் கைக்கு வந்ததும் அந்த மாணவர் பல மணி நேரம் அந்த செல்போனிலேயே மூழ்கிக் கிடந்திருக்கிறார். சுரேஷின் பெற்றோர், அவர் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாகவே நினைத்தனர். ஆனால், அவர் பிரபல ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியிருந்தார்.

அதாவது, சுரேஷ் ப்ரீ ஃபயர் என்ற ஆன்லைன் விளையாட்டுக்குழுவில், முன்பின் பார்த்திராத மாணவர்கள் சிலருடன் சேர்ந்து விளையாடிவந்தார். இதில், அவர் பின்தங்கியும் இருந்திருக்கிறார். கூட்டுக் கணக்கிலிருந்து புள்ளிகளை இழந்ததால், அவருடன் விளையாடிய மாணவர்களிடன் ஆயிரக்கணக்கான புள்ளிகளைக் கடனாகக் கேட்டுப் பெற்று, விளையாடியிருக்கிறார். ஆனால், அப்படியும் அவர் தோல்வியைத் தழுவ, அவருக்குப் புள்ளிகளைக் கடனாகக் கொடுத்தவர்கள், சுரேஷிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதனால், மனம் கலங்கிய சுரேஷ், தனது பெற்றோருக்கு, `நான் வீட்டைவிட்டுப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம்' என்று போனில் வீடியோவாகப் பேசி அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்த ரூ.100-ஐ எடுத்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே சென்றிருக்கிறார். மாணவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்த அவரின் பெற்றோர், கரூர் முழுக்க அவரைத் தேடியிருக்கின்றனர். அவர் எங்கும் இல்லை. அதனால் பதறிப்போன பெற்றோர், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தான்தோன்றிமலை காவல் நிலையம்
தான்தோன்றிமலை காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

அவர்களும் மாணவரைத் தீவிரமாக தேடத் தொடங்கினர். இந்தநிலையில், திருச்சியிலிருந்து போலீஸார், சுரேஷ் திருச்சியில் இருப்பதாகச் சொல்ல, அங்கே போய் மாணவரை மீட்டு வந்து, பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியே போன சுரேஷ், எங்கு போவது என்று தெரியாமல் திருச்சி பேருந்தில் ஏறி, திருச்சிக்குப் போயிருக்கிறார். அங்கே கையிலிருந்த காசு தீர்ந்ததும், அங்கு பரிதாபமாக நின்றிருக்கிறார். அவரிடம் நைச்சியமாகப் பேச்சு கொடுத்த ஒரு பெரியவர், அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டதும், நைசாகப் பேசி அவரைக் காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்திருக்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் சீரழிவது தொடர்கதையாகிவருவது, மக்களைப் பதறவைத்திருக்கிறது.