Published:Updated:

கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா... கெட்டுப்போன சிக்கனில் தயாரித்ததால் விபரீதம்!

கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா
News
கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா

உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் அந்த கூல்பார் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் ஃபுட் பாய்சன் ஆனதால் மாணவி இறந்ததாக தெரியவந்துள்ளது.

Published:Updated:

கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா... கெட்டுப்போன சிக்கனில் தயாரித்ததால் விபரீதம்!

உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் அந்த கூல்பார் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் ஃபுட் பாய்சன் ஆனதால் மாணவி இறந்ததாக தெரியவந்துள்ளது.

கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா
News
கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா

கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஷவர்மா உணவு வகை இப்போது பிரபலமாக உள்ளது. அந்த உணவு கேரள மாணவி ஒருவரின் உயிரை பறித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு செறுவத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் ஐடியல் கூல்பாரில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக செறுவத்தூர் பகுதியை சுற்றி உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த கூல்பாரில் இருந்து ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளூரை சேர்ந்த தேவநந்தா(16) என்ற மாணவிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் காஞ்ஞங்காடு மாவட்ட மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மாணவி தேவநந்தா இறந்தார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி ஷவர்மா சாப்பிட்ட கூல்பார்
மாணவி ஷவர்மா சாப்பிட்ட கூல்பார்

மேலும் சுமார் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் அந்த கூல்பார் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் ஃபுட் பாய்சன் ஆனதால் மாணவி இறந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த கூல்பார் சீல் வைக்கப்பட்டது. மேலும் கூல்பார் உரிமையாளரான மங்களூரைச் சேர்ந்த ஒருவரும், ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் செர்ந்த தொழிலாளியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே மேலும் ஒரு மாணவியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கூல்பார் மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். கூல்பாருக்கு சொந்தமான ஆம்னி வேன் ஒன்றையும் சிலர் தீவைத்து எரித்தனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.